Sunday, December 6, 2009

சந்திரன்

சந்திரன் சுழன்று வருவதைப்பார்
தண்ணொளி இன்றித் திரிவதைப் பார்
அந்தரம் அங்கே உயிர்க்காற்று
ஒன்றும் இல்லை சூனியம்தான்.

எரிமலை வாய்கள் பரந்திருக்கு
எங்கும் தூசி படிந்திருக்கு
எரிக்கும் வெப்பம் பகற்போதில்
எலும்பை உறைக்கும் குளிரிரவில்.

சூரியன் ஒளிபட்டு ஒளிர்கிறது
சுடராய் தண்ணொளி படர்கிறது
காரியம் புவியீர்பைச் செய்கிறது
கடலில் வற்றுபெருக் குண்டாகிறது

ஆம்ஸ்ரோங் காலடி பதித்துள்ளார்
காற்றும் கரைக்காத் தடமுண்டு
நாம்போய் குடிமனை கட்டிடுவோம்
நலமாய் வாழும் காலம்வரும்.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP