Showing posts with label எத்தனை அற்புதம்?. Show all posts
Showing posts with label எத்தனை அற்புதம்?. Show all posts

Sunday, December 6, 2009

எத்தனை அற்புதம்?

ஆயிரம் கோடி பால்வெளிகள்
அண்டம் சூழ்ந்து பரந்துளது
ஆயிரம் கோடி உடுக்கோலம்
ஆகா எத்தனை அற்புதகங்கள்.

எப்படி இத்தனை ரகசியங்கள்
எங்கும் பரந்து கிடக்கிறது
இப்படி இவற்றை வைத்ததுயார்
எல்லாம் இயங்கச் செய்ததுயார்?

வண்ண வண்ண நிறங்களிலே
வானை அழகு செய்வதைப்பார்
கண்ணைக் கவரும் புள்ளிகளாய்
காட்சி தருவது உடுக்களாம்பார்.

அத்தனை உடுக்களும் சுழல்வதைப்பார்
அதனதன் வழியில் செல்வதைப்பார்
எத்தனை அற்புதம் வானில் வைத்தான்
எங்கள் இறைவன் அறிவில்வல்லோன்.

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP