Showing posts with label விண்கலம். Show all posts
Showing posts with label விண்கலம். Show all posts

Sunday, December 6, 2009

விண்ணில் விண்கலம்

பறவைக் கூட்டம் போல்நாங்கள்
பறந்து வானில் பறக்கின்றோம்
உறைதான் நமது விண்கலமாம்
விழிப்பாய் இருங்கள் பயம்வேண்டாம்.

படுத்து நிமிர்ந்து உலாவரலாம்
பாடிக் கொண்டும் பேசிடலாம்.
திடமாய்ச் சொல்வதைக் கவனித்துச்
செயற்பட வேண்டும் கவனியுங்கள்.

பாடிப் பறந்து போகின்றோம்
பார்க்கு மிடமெலாம் அழகுமயம்
ஓடிப் போகுது மேகமெலாம்
உயரப் பறந்து போகின்றோம்

பூமிப் பந்தைக் காணவில்லை
புதிதாய் புள்ளியாய் தெரிகிறது
நாமிப் போது விண்வெளியில்
நலமாய் வலமாய் வருகின்றோம்.

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP