Saturday, August 27, 2011

சந்திரன் கதை

சந்திரன் கதை
முன்னுரை
‘அற்புதமான வானம்’ என்ற சிறுவர்களுக்கான அறிவியல் நூலை எழுதி வெளியிட்டேன். அந்நூலைச் சிறந்த அறிவியல் நூலாகத் தேர்ந்தெடுத்து அகில இலங்கை அரச சாஹித்திய விழாவில் விருதும் ஐம்பத்தைந்து ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கிக் கௌரவிக்கப் பட்டேன். இது இலங்கை அரசு சிறுவர் இலக்கியத்துக்குக் காட்டும் கரிசனையைக் காட்டுவதாக நான் நினைந்து கொள்கிறேன். அதே நூல் கிழக்கு மாகாண சாஹித்திய விழாவிலும் பரிசினைப் பெற்றுக் கொண்டது.
எனது ‘அற்புதமான வானம்’ நூலினைப் படித்த பல அன்பர்கள் சந்திரன். சூரியன், மற்றும் கோள்களைப் பற்றிய தரவுகளை உள்ளடக்கிய தனித்தனி நூல்களாக ஆக்கித்தந்தால் சிறுவர் உலகம் பயன்பெறும் என்று அறிவுரை தந்தார்கள். ஒவ்வொன்றிலும் ஐதீகக் கதைகளும், அறிவுப+ர்வமான விடயங்களும் உண்டு. அவற்றைத் தனித்தனியாகத் தந்தால் மேலும்; சிறப்பாக இருக்கும் என்று வற்புறுத்தினார்கள். அதன் நிமித்தமே சந்திரனின் ஐதீகக் கதைகளை முதலில் எழுதி வெளியிடுகிறேன். இந்நூலில் சந்திரனின் இதிகாசக் கதைகள் அடங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக அதன் இரண்டாவது பாகத்தில் நவீன அறிவியல் சார்ந்த உண்மைச் செய்திகளும் உள்ளடக்கப் படவுள்ளன. அதனை வெகுவிரைவில் வெளியிடுவேன்.
இந்நூலில் அடங்கியுள்ள கதைகள் வாசிக்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாசிப்பவர்கள் கற்பனை வானில் பறக்கலாம். வாசிப்பதால் நாம் சிந்திக்கிறோம். தொலைக்காட்சி நமக்குச் சிந்தனையைத் தருவதில்லை. நூல்கள் நமக்குக் கற்பனையையும், சிந்தனையையும், காரண காரியங்களையும் தருகின்றன. ஆதலால் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கணினிகள் நமக்கு உறுதுணையாகின்றன. அதனை நாம் பயன்படுத்தவேண்டும். இணையதளங்களில் வரும் அறிவுசார் விடயங்களை வாசிக்கவேண்டும். நாமும் அவ்வாறான சிந்தனைகளில் ஈடுபட்டு நமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்நூல் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகிறேன். வாசிக்கும் கலாசாரத்தை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இந்நூல் வெளிவரக் காரணகர்த்தாவானவர்கள் பலர். வாசகர்களாகிய நீங்கள்தான் முதல் நன்றிக்குரியவர்கள். வேண்டியவிடத்துப் பொருத்தமான படங்களைத் தெரிந்து பொருத்திய எனது மகன் ச.அ.அருள்பாஸ்கரன், பதிப்புரை தந்துதவிய லங்கா புத்தகசாலை முகாமையாளர் திரு.க.சதீஸ், அழகாக அச்சிட்டுதவிய நிசான் பிறின்ரேர்ஸ் அலுவலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கேணிப்பித்தன் ச.அருளானந்தம்










நாம் வாழும் உலகம்நாம் வாழும் பூமி ஒரு கிரகம் என்பார்கள். 4.57 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். சூரியனிலிருந்து மூன்றாமிடத்தில் பூமி உள்ளது. மிக அழகான கோளமாகப் பூமி திகழ்கிறது. அதில் தான் நாம் வாழுகிறோம். அண்ட வெளியில் இருந்து பார்த்தால் நமது பூமி நீல நிறமாகவும், வெள்ளி நிறமாகவும் பளபளக்கும். பிரபஞ்சத்தில் இந்தக் கிரகத்தில் மட்டுந்தான் உயிரினங்கள் உண்டு. வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதனையிட்ட இடையறாத ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. பூமியை ‘காயா’, ‘ரெறா’ பூமாதேவி, பூமிமாதா’ என்றும் அழைப்பார்கள்.பூமியின் 71மூ பகுதி நீரினால் சூழப்பட்டுள்ளது. பூமி ஒரு சமதளமான தட்டைப்போல் காட்சியளிக்கிறது. தட்டின்மேல் பெரிய கூரையைப்போல் வானம் தெரிகிறது அல்லவா? முற்காலத்தில் பூமி ஆமையின் முதுகில் உள்ளது என்றார்கள். மூன்று திமிங்கிலங்களின் மீது உள்ளது எனவும் நம்பினார்கள். பூமியின் ஓரங்களுக்குச் சென்று திமிங்கிலங்களைப் பார்க்க முடியவில்லை. சிறிது சிறிதாக மனிதர்கள் பயணங்கள் செய்ய ஆரம்பித்தனர். விலங்குகளில் பயணம்செய்தார்கள். படகுகளில் கடல்களில் பயணித்தார்கள். வழிதவறி விடாது இருக்க வானத்தைப் பார்த்தார்கள். அக்காலத்தில்தான் நட்சத்திரங்களை நம்பினார்கள். ‘வழிகாட்டும் நட்சத்திரம்’ என்ற சொற்தொடர் தோன்றியது. பூமியில் நிலநடுக்கம் தோன்றியது. பூமி நடுங்கியது. கடல் பொங்கி பெரும் அலைகளை வீசியது. எரிமலைகள் வெடித்துச் சிதறின. ஆனாலும் சூரியனும். சந்திரனும். நட்சத் திரங்களும் ஒரே மாதிரியாக நகர்ந்து கொண்டிருந்தன. பயணிகள் பலநாட்கள் பயணித்தனர். நட்சத்திரங்கள் தொடுவானத்துக்கு மேல் வருவதைக் கண்டார்கள். பின் கீழிறங்கி மறைவதையும் பார்த்தார்கள்.
பூமி பிரமாண்டமானது. தட்டையானது. அதனாற்தான் கடல்நீர் அப்படியே கொட்டாமல் நிலைத்திருக்கிறது என நம்பினார்கள். பின்னர் பூமி வட்டவடிவமான ரொட்டியைப் போன்றது. அது வளைந்துள்ளது என மனிதர்கள் நம்பினார்கள். பின்னர் பூமி அரை உருண்டையானது என்றும் சமுத்திரங்கள் அதன்மேல் அப்பியுள்ளன எனவும் நம்பினார்கள்.
சூரியனும். சந்திரனும். நட்சத்திரங்களும் கீழிறங்கி, மறுநாள் எதிர்திசையில் வருகின்றனவே. சிந்தித் தார்கள். சூரியன் கிழக்கே உதிக்கத் தாமத மானதில்லை. சந்திரனும் கிழக்கேதான் உதிக்கிறது. ஆனால் சந்திரனின் உதயம் வித்தியாசமானது. பூமி அரையுருண்டை வடிவானதல்ல. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின் பூமி உருண்டையானது என நம்பினார்கள். கடலோடிகளான கொலம்பஸ், மகலன் உலகை உருண்டை என்பதை நிரூபித்தனர். இதற்காக அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம்.
பூமிக்கு ஈர்ப்புச் சக்தியுண்டு. அதனாற்தான் பூமியில் உள்ள பொருட்கள் கீழே விழாதிருக்கின்றன. சமுத்திரங்களும். மலைகளும் அப்படியே இருக்கின்றன என அறிவுபூர்வமாகத் தெளிந்தனர். சூரியன் பூமியைச் சுற்றுவதாகத்தான் முதலில் நம்பினார்கள். பூமி சூரியனைச் சுற்றி வலம் வருவதை ரசித்தார்கள். சந்திரன் புவியைச் சுற்றி வருவதை உணர்ந்தார்கள். சந்திரன் புவியின் உபகோள் என்பதைப் புரிந்து கொண்டனர்.
வானத்தை அண்ணார்ந்து பாருங்கள். எப்படி இருக்கிறது? நமது வானம் அற்புதமானது. பகற்பொழுதில் நீலமாக இருக்கிறது. மேகக்கூட்டம் வெண்பஞ்சுபோல் பறந்து திரியும். இரவினில் கருமையாகத் தெரிகிறது. மழைக்காலத்தில் இருண்டு கிடக்கும். வெயிற்காலத்தில் அற்புதமாகவிருக்கும். பகலில் நீலவானில் சூரியன் உலாப்போகும்.. வெப்பத்தைத் தந்து உலகை இயக்கும். சூரியனை நாம் கண்களால் பார்க்க முடியாது. கண்கள் கூசும். வெற்றுக் கண்ணாடியில் குப்பி விளக்கின் புகையைப் படியவைக்கலாம். அதனூடாகப் பார்த்தால் சிவந்த கோளமாய்த் தெரியும். காலையிலும், மாலையிலும் சூரியன் சிவந்த கோளமாக அழகாகக் காட்சி தரும்.
இது நவீன தொழில்நுட்ப விஞ்ஞான யுகம். இப்போது சூரியனைப் பார்ப்பதற்குப் பலவகைச் செயற்கைப் பொருட்கள் உலாவருகின்றன. அவற்றின் ஊடாகப் பார்;க்கலாம். ஆனால் சந்திரன் அவ்வாறல்ல. வெற்றுக் கண்களால் நாம் பார்க்கலாம். இரவில் நிலவின் ஆட்சி நடக்கும். நட்சத்திரங்கள் மின்விளக்குப் போடும். நிலவின் ஒளி இன்பத்தைத் தரும். சந்திரனின் உள்ளே கருமையான மறுக்கள் தெரியும்..
வானில் நிலவு ஒரேமாதிரியாக இருப்பதில்லை. பிறையாக இருக்கும். பின் வளர்ந்து பூரண சந்திரனாகப் பிரகாசிக்கும். அதன்பின் படிப்படியாகத் தேய்ந்து மறைந்து போகும். அமவாசை தோன்றும். அமவாசையின் பின் கூனற்பிறை எட்டிப்பார்க்கும். ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டு செல்லும். முதற் பதினைந்து நாட்கள் வளர்பிறையாகத் தெரியும். அதனைத் தொடர்ந்து பூரணசந்திரன் வரும். அதனை முழுநிலவு அல்லது நிறைமதி என்கிறோம். பின்னர் தேய்பிறையாகும். இதற்கெல்லாம் பல கதைகள் உண்டு. கிரேக்கர்கள், ரோமானியர்கள். பபிலோனிர்கள், எகிப்தியர். சீனர். அரேபியர், இந்தியர் போன்ற பலநாட்டு மக்களிடையேயும் பல்வேறு கதைகள் உலா வருகின்றன.
இரவில் வானம் அழகாக இருக்கும். பல அளவுகளில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டும். பெரியனவாகவும், சிறியன வையாகவும் தெரியும். நட்சத்திரக் கூட்டம் இரவில் உலா வரும். அவை பகலில் எங்கே செல்கின்றன.? ஓடி ஒளிந்து கொள்கின்றனவா? சில மாலை நேரத்தில் தெரியும். இன்னும் சில காலை வேளைகளில் தெரியும். சில நட்சத்திரங்கள் மிக நெருங்கி இருக்கும். சில வெகுதூரத்தில் இருக்கும். சில பிரகாசமாக ஒளிவிடும். சில மங்கலாகத் தெரியும். எத்தனை ஆயிரம் கோடி நட்சத்திரக் கூட்டங்கள் வானில் தெரிகிறன. அவற்றுள் கிரகங்களும் உள்ளன. நாம் வாழும் பூமியும் ஒரு கிரகந்தான். அல்லவா?
வானம்தான் மனிதர்களுக்கு ஆசிரியன். சூரியனும் சந்திரனும் காலத்தைக் காட்டிக் கற்றுக் கொடுத்தன. நாட்காட்டிகளான கலண்டர்களை வகுத்துக் கொள்ள உதவின. பூமி தன்னை ஒருமுறை தனது அச்சில் சுற்றிவருவதால் இரவுபகல் உருவாவதைக் கண்டார்கள். சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வரும் காலத்தைக் கணித்தார்கள். பூமி சூரியனைச் சுற்றி வருவதை அவதானித்தார்கள். நாள், கிழமை, மாதம் வருடம் ஆகியவற்றைக் கணிக்க வானம் உதவியது. பருவகாலங்களை அறியச் செய்தது. சந்திரனை மையமாக வைத்தே இவை கணிக்கப் றெ;றன.
ந்திரனும், சூரியனும் நாம் வாழ உதவுகின்றன. கிழமையின் முதல்நாள் ஞாயிறு என்பார்கள். ஞாயிறு என்பது சூரியன் என்று பொருள். அன்று நம்மெல்லோருக்கும் ஓய்வு நாளாகும். அடுத்தநாள் திங்கள். திங்கள் என்பது சந்திரன் என்று பொருள். பூமிக்குச் சந்திரன் துணையாக உள்ளது. சந்திரனை வைத்தே மக்கள் காலத்தைக் கணித்தார்கள். சந்திரன் சக்திவாய்ந்ததாக இருக்கிறது.
சூரியனையும், சந்திரனையும் மையமாகக் கொண்ட கதைகள் பல உள்ளன. உலகின் பல பாகங்களிலும் உலா வருகின்றன. இந்நூலில் அவற்றைப் பாடித்துச் சுவைகலாம்.
சந்திரன் இயற்கையில் மிகவலுவான சக்தியாக உள்ளதை அவதானிக்கலாம். சந்திரனின் ஆதர்ஷண சக்தி அபரிமிதமானது. வானம் தெளிவாக உள்ள நேரத்தில் அவதானியுங்கள். சந்திரன் பவனிவருவதைப் பாருங்கள்.
மனதைக் கொள்ளைகொள்ளும். அழகுக் காட்சியாக இருக்கும். கவிஞனின் உள்ளத்தில் கவிதையைப் பொங்கச் செய்யும். சிறுவர் உள்ளங்களில் களிப்பை ஏற்படுத்தும். நிலவொளியில் விளையாடி மகிழ்வார்கள். கிழக்கில் சந்திரோதயக் காட்சி மனதைக் கொள்ளை கொள்ளும். கடலை ஆர்ப்பரிக்கச் செய்யும். கடல் பேரலைகளைத் தள்ளி ஆரவாரம் செய்யும். வானத்தில் நட்சத்திரக் கூட்டத்துடன் சந்திரன் பவனிவரும். குளிர்நிலவைப் பொழியும்.
வண்ண நிலவே வண்ண நிலவேவிண்ணில் நீந்தும் வண்ணநிலவேகண்ணை கவரும் கடற் பரப்பில்கோலம் போட எங்கே கற்றாய்.?
என்று பாடச்சொல்லும். மனிதர்கள் சூரியனையும், சந்திரனையும் கடவுளாகப் போற்றுகிறார்கள். முற்காலத்தில் வானத்தில் உள்ள பொருட்களைப் போய்ப்பார்க்க முடியாது என்று எண்ணினார்கள். அதனால் பலவாறான கற்பனைக் கதைகளை இயற்றினார்கள். சந்திரனின் தோற்றம் இவ்வாறான கதைகளுக்கு வித்திட்டன. இவற்றை ஆணாகவும், பெண்ணாகவும் கொள்கிறார்கள். நிலவைப் பற்றிய கதைகளைச் சொன்னார்கள். உலகத்தில் உள்ள மொழிகளில் நிலவைப்பற்றிய கதைகள் ஏராளம் உண்டு.
சந்திரனைப் பற்றிய கதைகள்.
சந்திரனைப் பற்றிய கதைகள் பல்வேறு நாடுகளிலும் உண்டு. பல்வேறு மொழிகளிலும் உண்டு. அவை காலத்துக்குக் காலம் எழுந்த கதைகளாகும். இவை யாவும் பொய், கட்டுக் கதைகளென்று தள்ளிவிட முடியாது. அவைகளுள் உண்மைகளும் உண்டு. அவ்வாறான கதைகளையே இந்நூலில் உள்ளடக்கியுள்ளேன்.
முற்காலத்தில் வானத்தில் உள்ள பொருட்களைப் போய்ப்பார்க்க முடியாது என்று எண்ணினார்கள். அதனால் பலவாறான கற்பனைக் கதைகளை இயற்றினார்கள். சந்திரனின் தோற்றம் இவ்வாறான கதைகளுக்கு வித்திட்டன. இக்கதைகள் யாவும் அன்பு, உண்மை, அழகு பற்றியதாகவே அமைந்தன. மனித இனம் உள்ளளவும் புதுப்புதுக் கதைகள் தோன்றத்தான் செய்யும். பல உண்மைகளும் தோற்றம் பெறத்தான் செய்யும். கருவினில் உருவாகும் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்று சந்திரனின் வளர்தல், தேய்தல் மூலம் கணிக்கப் படுவதாகவும் கூறுகிறார்கள். எப்படி இருப்பினும் சந்திரனின் கதைகள் எம்மைப் பரவசப்படுத்திக் கொண்டுதான் இருக்கும்.
பூமியின் சந்திரன்
நாம் வாழும் பூமிக் கோளுக்கு ஒரு சந்திரன் உள்ளது. அது நமது பூமியில் இருந்து 383,000 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. இரவு நேரத்தில் வானில் பவனி வருவதைப் பார்க்கிறோம். சந்திரன் வளர்பிறையாகத் தோன்றும். பின் படிப்படையாக வளர்ந்து முழுநிலவாகத் தெரியும். பின்னர் படிப்படியாகத் தேய்ந்து ஒருநாள் முற்றுமுழுதாக மறைந்துவிடும். அன்றைய தினத்தை அமவாசை என்பார்கள். இவற்றுக் கெல்லாம் உலக நாடுகளிடையே ஐதீகக் கதைகள் உண்டு. அவற்றை நாம் அறிந்திருக்க வேண்டும்.
நவீன விஞ்ஞான யுகத்தில் நாம் வாழுகிறோம். அறிவியல் ஆய்வுகள் தோன்றுவதற்கு முன் மக்கள் மத்தியில் உலாவந்த கதைகளைப் பார்த்தால் ஒரு வகையில் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும். அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம். பின்னர் அறிவியலோடு தொடர்புடையதை அறிவோம்.

பூமியும், சூரியனும் சந்திரனும்.
நாம் வாழும் பூமியை உலகம் என்றும் சொல்வார்கள். நமக்கு ஆதாரம் இந்தப் பூமிதான். இந்தப் பூமியின் பலபாகங்களிலும் மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழி பேசுகிறார்கள். வாழுகின்ற முறைகளிலும் வித்தியாசங்கள் உள்ளன. உணவு, உறைவிடம், உடைகளில் பண்பாடுகளில் ஒற்றுமைகளும். வேற்றுமைகளும் உள்ளன. நமது புவியின் அமைப்பு விசித்திரமானது.
கோளவடிவான நமது பூமியில் ஒரே அளவான சூரிய வெளிச்சம் படுவதில்லை. அதேபோல் வெப்பமும் நிலவுவதில்லை. இதற்கேற்றாற் போல் பல வலயங்களாகப் பிரிப்பார்கள். வெப்பவலயம், இடைவெப்பவலயம், குளிர்வலயம் என்று பிரித்துப் பார்ப்பார்கள்.
துருவங்களில் சில காலங்களில் சூரியன் பிரகாசிப்பதில்லை. பலநாட்களுக்கு இருளாகவே இருக்கும். மறைந்த சூரியனை நினைப்பார்கள். சந்திரனைப் பார்ப்பார்கள். சந்திரன் இல்லாதபோது அதனையிட்டுக் கவலை கொள்வார்கள். உறைந்து போன காடுகளையும் பார்ப்பார்கள். கறுப்பு நிறக்கற்களையும் காண்பார்கள். குளிரும் தொடர்ந்து இருக்கும். அந்த நாட்களில் மக்கள் கூடியிருந்து கதைகளைக் கூறுவார்கள். இயற்கையை ரசிப்பவர்கள், கற்பனை வளமுடையவர்கள். அறிவியலை நமக்குக் கற்பனைத் தேனைத் தடவித் தருபவர்கள். அக்கதைகளுள் மூழ்கினால் விஞ்ஞான விந்தைகளைக் காணலாம்.
வானமும் சந்திரனும்.
வானம் என்பதென்ன? பரந்து விரிந்த பெருவெளி. அதனைத்தான் பிரபஞ்சம் என்கிறோம். வானத்தில்தான் நமது பூமியும் உள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ளதுதான் சந்திரன். அதனால் சந்திரனின் ஆதர்ஷண சக்தி பூமியைத் தாக்குகின்றது. பூமியில் வற்றுப் பெருக்கில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றது. சுந்திரனுக்கு ஒளியில்லை. ஆனால் சூரியனது ஒளியைப் பெற்று ஒளிர்கிறது. சந்திரனின் கதிர்கள் குளிரானவை. ஆனால் அக்கதிர்கள் மனிதருக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கருதுவோரும் உண்டு. சந்திரன் உதயங்கொள்ளும் போது கடலலை ஆர்ப்பரித்து எழும். கடல் பெருக்கெடுக்கும். உயிரினங்களையும் சந்திரனின் ஒளி தாக்குகின்றதாகக் கருதுவோரும் உண்டு. சூரியனைப் போல் குறிபிட்ட நேரத்தில் சந்திரன் உதிப்பதில்லை.
நம்பிக்கைகள்
சந்திரன் வளர்பிறையாக இருக்கும்போது வீடுகட்டுவதற்குரிய மரங்களை வெட்டமாட்டார்கள். அவை விரைவில் பழுதாகிவிடும் என்பதாக ஐதீகம். பூரணை அல்லது முழுமதி நாட்கள் கனத்த நாட்களாகக் கருதுவோரும் உண்டு. நோயுற்றவர்களுக்கு அந்நோய் அதிகரிக்கும். மனநோயாளிகளுக்கு மனநோய் அதிகரிக்கும் என்று கூறுவார்கள். பொதுவாக மனிதர்களுக்குச் சித்தம் கலங்கும் நாள் என்றும் கூறுவார்கள். இலங்கையில் அவ்வாறான மக்கள் அதிகமுள்ளனரா என்ற வினாவும் எழுகிறது. அதனால்தான் நமது இலங்கை அரசு போயாநாட்களை அரச விடுமுறையாக ஆக்கியது என்று கூறுபவர்களும் உண்டு.
மூதாட்டியின் கதை
இந்த வானம் அடிக்கடி பூமியைத் தொட்டு விளையாடும். ஒரு மூதாட்டி இருந்தாள். அவள் காலையும் மாலையும் முற்றத்தைப் பெருக்குவாள். கைகளில் விளக்குமாறு இருக்கும். முற்றத்தை அழகாக வைத்திருப்பாள். சந்திரன் வானில் இருந்து பார்க்கும். சந்திரனுக்கு மூதாட்டியோடு சீண்டி விளையாட விருப்பம். ராமனும் அப்படித்தானே செய்தான். கூனி தண்ணீர் குடத்தோடு போகும்போது கல்லெறிவான். அது குடத்தைத் தாக்கும். தண்ணீர் வழிந்தோடும். அவன் சிரித்து மகிழ்வான். கூனி ஆத்திரத்தில் நிற்பாள். பின்னர் கூனியின் விளையாட்டு ராமனைப் பாதித்தது. இல்லையா?
நமது சந்திரனும் அப்படித்தான். சந்திரன் அடிக்கடி பூமிக்கு வரும். வழித்துணைக்கு வானத்தை அழைக்கும். மூதாட்டி முற்றத்தைக் கூட்டுவாள். சந்திரன் மெதுவாகக் கீழிறங்கி வந்து முதுகில் தட்டிவிட்டு ஓடும். மூதாட்டிக்குக் கோபம் வரும். இது பலநாட்கள் தொடர்ந்தது. ஒருநாள் சந்திரன் வானத்தை விளையாட அழைத்தது. வானத்தோடு சேர்ந்து வந்து மூதாட்டியின் முதுகில் தட்டியது. மூதாட்டி நிமிருமுன் மேலே ஓடியது. அன்று இப்படிப் பலமுறை நடந்தது. மூதாட்டி திட்டம் போட்டுக் காத்திருந்தாள்.
மூதாட்டி முற்றத்தைக் கூட்டுவது போல் பாசாங்கு செய்தாள். விழிப்பாக இருந்தாள். சந்திரன் வானத்தையும் அழைத்துக் கொண்டு வந்தது. மூதாட்டி விளக்குமாற்றால் அடித்தாள். அத்துடன் “ஏ... சந்திரனே நீ தேய்ந்து தேய்ந்து போவாயாக”. என்று சாபம் போட்டாள்.
வானம் பயந்து விட்டது. “ஏ...வானமே இனி நீ கீழே இறங்கி வராதிருப்பாயாக”. என்று சாபமிட்டாள். சந்திரன் பயந்து நடுங்கி மூதாட்டியிடம் பாவமன்னிப்புக் கேட்டது. பதினைந்து நாள் தேய்ந்து போவாய். பின் படிப்படியாக வளர்ந்து வருவாயாக. ஒருநாள் மட்டும் நீ முழுநிலவாக ஒளிவீசுவாயாக”. என்று விமோசனம் அளித்தாள். அதன்பின்னர் வானம் கீழிறங்கி வருவதில்லையாம். சந்திரன் மாதத்தில் பதிநாலு நாட்கள் தேய்ந்து போகும் பதினைந்தாவது நாள் முற்றாகத் தேய்ந்து மறைந்துவிடும். அன்று அமவாசையாகும். பின்னர் வளர்ந்து வரும். பதினைந்தாவது நாள் முழமையாகத் தோற்றம் தரும்.. அதுதான் பூரணை முழநிலவு ஆகும். இப்படியான கதைகள் நமது கிராமங்களில் உலா வருகின்றன.
சந்திரன் தேய்ந்து வளர்தல்.
சந்திரன் அழகும் ஆற்றலும் கொண்டவர். சந்திரனைக் கடவுளாகப் போற்றினார்கள். அவரது அழகில் மயங்காதோர் இல்லை. அவர் வானில் பவனிவரும் போது மக்கள் திரளாக நின்று ரசிப்பார்கள். கடல் மகிழ்ச்சியால் அலைகளை வீசி ஆர்ப்பரிக்கும். காற்று வீசி இசை யெழுப்பும். முன்னொரு காலத்தில் தக்சன் என்றொருவர் வாழ்ந்தார். அவர் பல ஆற்றல்களைக் கொண்டவர். தவவலிமைமிக்கவர். சக்தி வாய்ந்தவர்.
அவருக்கு இருபத்தியேழு மகள்மார் இருந்தார்கள். அவர்கள் சந்திரனின் அழகில் மயங்கி விட்டார்கள். திருமணம் செய்தால் சந்திரனையே செய்வோம் என்றார்கள். தக்சன் சந்திரனை அணுகினார். அவரிடம்
மகள்மாரின் விருப்பத்தைக் கூறினார். அவர்கள் அனைவரையும் ஒரேமாதிரியே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். சந்திரனும் அதற்கு ஒப்புதல் அளித்தார். அதனால் சந்திரனுக்கே திருமணம் செய்துவைத்தார்.
நாட்கள் நகர்ந்தன. சகோதரிகள் சந்தோசமாக வாழ்ந்தனர். சந்திரன் இருபத்தேழு மனைவிகளுள் ரோகினியை அதிகம் நேசித்தார். இது மற்றச் சகோதரிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் சந்திரன்மேல் கோபமாக இருந்தார்கள். தங்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். எங்கள் கணவர் எங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ரோகினியிடமே பாசமாக இருக்கிறார் என்றார்கள். தந்தையின் முன் கண்ணீர் விட்டார்கள். தக்சனுக்குச் சங்கடமாகப் போய்விட்டது. தக்சன் சந்திரனுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆனாலும் சந்திரனில் எந்த மாற்றமும் இல்லை. முறைப்பாடு அதிகரித்தது. “எவ்வளவு சொன்னாலும் அவர் ரோகினியையே அதிகம் விரும்புகிறார்”. என்றார்கள். அடிக்கடி மகள்மார் சந்திரன்மேல் புகார் கூறிக்கொண்டே வந்தார்கள். ‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்பார்கள். தக்சனுக்குக் கோபம் பொங்கியது. அவர் சந்திரனைப் பார்த்தார்.
“நான் சொல்லியும் நீ கேட்கவில்லை. என்னால் இனியும் பொறுக்க முடியாது. நீ சொன்னபடி செய்யவில்லை. உனது உடல் ஒளியற்றுத் தேய்ந்து போகட்டும்” தக்சன் சந்திரனுக்குச் சாபமிட்டார். சந்திரன் உடலில் மாற்றம் தோன்றியது. அவரது உடல் தேய்ந்து கொண்டு வந்தது.சந்திரன் வருந்தினார். பிரமாவிடம் முறையிட்டார். அவர் “நீ சிவனைச் சிந்தையில் கொண்டு அவரிடம் முறையிடு. எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிப்பார். உனக்காக நானும் சிவனை வேண்டுகிறேன்”. என்று அறிவுரை கூறினார்.
சந்திரன் சிவனைச் சிந்தையில் கொண்டு பிரார்த்தனை செய்தார். தற்காலிகத் தீர்வு கடைத்தது. ரோகினியை நோக்கிச் சந்திரன் நகரும்போது உடல் வளர்ந்துபோகும். ரோகினியிடம் இருக்கும்போது பிரகாசமான உடலோடு இருப்பார். அந்த ஒருநாள் மட்டுந்தான் அவருக்குச் சந்தோசம். ரோகினியை விட்டுப் பிரிந்து செல்லும்போது உடல் தேய்ந்துபோகும். ஒருநாளைக்கு உடல் இருளாகவே இருக்கும். அதனைத்தான் அமவாசை என்பார்கள். முதல்நாள் சந்திரன் சிவனோடு அவரது சடாமுடியில் இருப்பார். சந்திரனைச் சடாமுடியில் வைத்திருப்பதாலே சிவனுக்குச் ‘சந்திரசேகரர்’ என்ற பெயரும் வந்தது. அப்போது தற்காலிகத் தீர்வு கிடைத்தது.
விநாயகரும் சந்திரனும்.
விநாயகருக்கு மோதகம் என்றால் நல்ல விருப்பம். ஒரு நாள் அதிகளவு மோதகம் கிடைத்தது. நல்ல சுவையான மோதகங்கள். வயிறு முட்டும்வரை நன்றாகச் சாப்பிட்டார். மிகுதி இருந்தது. அவற்றைச் சுருட்டிக்கட்டினார். அவருக்கு வயிறு ஏதோ செய்தது.
வெளியில் சற்றுக் காலாற நடக்கவேண்டும் போலிருந்தது. மோதக முடிச்சும் அவரிடம் இருந்தது. தனது எலி வாகனத்தில் ஏறியமர்ந்து புறப்பட்டார். ஒரு காட்டையண்டி எலிவாகனம் சென்றது. அப்போது ஒரு பாம்பு குறுக்கறுத்தது. அவரது வாகனமான எலி பயந்து தடுமாறியது. விநாயகர் வீழ்ந்துவிட்டார். விநாயகர் விழுந்ததும் மோதகமுடிச்சு அவிழ்ந்து விழுந்தது. வைத்திருந்த மோதகங்கள் உருண்டோடின. விநாயகர் சிறுபிள்ளைபோல் ஓடியோடீ மோதகத்தைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார்.
இவற்றையெல்லாம் சந்திரன் தனது மனைவியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காட்சியை ரசித்து வாய்விட்டுச் சிரித்தார்கள். விநாயகருக்கு வந்ததே கோபம். தன்னை அவமதித்துச் சிரிப்பதாக நினைத்துக் கொண்டார். “ என்னை எள்ளி நகையாடுகிறீர்களா? சந்திரனே! நீ ஒளியற்று மங்கிப் போகக் கடவாய்” என்று சபித்துவிட்டார். சந்திரன் பயந்து நடுங்கினார். அப்போதிருந்தே சந்திரனன் ஒளி மங்கத்தொடங்கியது. சந்திரன் ஒளியற்றுத் தடுமாறினார். சிவன் இயற்கையின் சமமின்மையை உணர்ந்து கொண்டார். சந்திரனை விநாயகரிடம் மன்னிப்புக் கோருமாறு அறிவுறுத்தினார்.
சந்திரன் விநாயகரிடம் மன்னிப்புக் கோரினார். தனது சாபத்தைக் குறைக்குமாறு வேண்டினார். விநாயகரும் சாபத்தைக் குறைப்பதற்குச் சம்மதித்தார். “நீ ஒவ்வொரு நாளும் படிப்படியாக உனது ஒளியை இழப்பாய். ஒரு நாளைக்கு மட்டும் யார் கண்ணுக்கும் தெரியாமல் தேய்ந்து ஒளியிழந்து நிற்பாய். அது அமவாசையாக இருக்கும். அன்று நீ சிவபெருமானை அணைந்திருப்பாய். மீண்டும் படிப்படியாக ஒளிபெற்று வெளிவருவாயாக. ஒரு நாள் மட்டும் பூரணமான ஒளியைப் பெறுவாயாக” என்று வரமளித்தார். அது இப்போதும் தொடர்கிறது.
சந்திரனையும் சூரியனையும் பாம்பு விழுங்குதல் சூரியனையும், சந்திரனையும் இராகு என்னும் பாம்பு விழுங்குவதாக இந்துசமயப் புராணங்கள் கூறுகின்றன. தேவர்கள் நீடு வாழ்வதற்காக அமிர்தம் வேண்டி நின்றார்கள். அமிர்தம் எங்கே கிடைக்கும். திருப்பாக் கடலைக் கடைந்தால் அமிர்தம் கிடைக்கும் என விஷ்ணு கூறினார். தேவர்கள் மட்டும் கடையமுடியாது. ஆதலால் அசுரர்களையும் அழைத்தார்கள். மகாமேரு மலையை மத்தாகப் பயன்படுத்தினார்கள். ஆதிசேஷன் என்ற பாம்பை கயிறாகப் பயன் படுத்தினார்கள். தேவர்கள் ஒரு புறம் நின்றார்கள். அசுரர்கள் மறுபுறம் நின்றார்கள். மலையசைந்தது. திருப்பாக் கடல் கடையப்பட்டது. ஆதிசேஷனுக்கு வலித்தது. அமிர்தம் உருவாகிக் கொண்டு வந்தது. வலியினால் ஆதிசேஷன் விஷத்தைக் கக்கிவிட்டது. அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். அவர் உடனே அந்த விஷத்தைக் கையிலேந்தி விழுங்கினார். அவரது மனைவி உமாதேவியார். அவர் ஓடோடி வந்தார். சிவனாரின் தொண்டையை அழுத்திப் பிடித்தார். விஷம் கீழிறங்க வில்லை. தொண்டைக் குழியோடு நின்றுவிட்டது. சிவனின் தொண்டையில் விஷம் இருந்தது. அதனால் அவரது தொண்டை நீலம்பாரித்துவிட்டது. அமிர்தம் கிடைத்துவிட்டது. தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்க வேண்டும். அசுரர்களுக்குக் கிடைக்கக் கூடாது. கிடைத்தால் அவர்கள் சாகாவரம் பெற்றுவிடுவார்கள். என்ன செய்வது.? தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்தார். அசுரர்கள் அந்த அழகியின் அழகில் மயங்கிக் கொண்டிருந்தார்கள். இராகு என்ற அசுரன் தேவர்கள் போல் மாறுவேஷத்தில் வந்தார். தேவர்களோடு கலந்து கொண்டார். அவரை யாரும் அடையாளம் காணவில்லை. ஆனால் சூரியனும் சந்திரனும் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர். மெதுவாக விஷ்ணுவிடம் கூறிவிட்டார்கள். தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறப் பட்டது. தேவர்கள் போன்று இருந்த இராகுவுக்கும் கொடுபட்டது.அவர் அமிர்தத்தைக் குடிப்பதற்கு முயற்சித்தார். மோகினி வடிவிலிருந்த மகாவிஷ்ணு இராகுவின் கழுத்தைத் துண்டம் செய்தார். வாய்க்குள் அமிர்தம் சென்றிருந்தது. அதனால் தலைப்பகுதி உயிரோடிருந்தது. உடல் கேதுவாக மாறியது. இராகுவும் கேதுவும் சேர்ந்து கொண்டன. சூரியனையும் சந்திரனையும் விழுங்கிவிடச் சபதமெடுத்தன.இன்றுவரை ராகு சூரியனை விழுங்க முயற்சிக்கிறது. கேது சந்திரனை விழுங்க முயற்சிக்கிறது. இந்நிகழ்ச்சி காலத்துக்குக் காலம் நடைபெறுகிறது. அதுதான் கிரகணம். என்று புராணம் கூறுகிறது.
பொஹ்யொலா என்றொரு நாடு
நமது உலகத்தில் பல நாடுகள் நீண்ட நாட்களுக்குச் சூரிய ஒளியைப் பெறுவதில்லை. சிறப்பாகத் துருவப்பகுதியில் உள்ள நாடுகளில் இவற்றை அவதானிக்கலாம். பொஹ்யொலா என்றொரு நாடு இருந்தது. பொஹ்யொலா என்றால் நீண்ட நாட்களுக்குச் சூரியன் மறையும் நாடு என்று பொருள். இவ்வாறான நாடுகள் பல நமது உலகத்தில் உண்டு. அவற்றை பொஹ்யொலா என்றழைப்பார்கள். அங்கே இருளும் குளிரும் நிலவும். பொஹ்யொலா நாட்டை லோவுஹி என்ற சூனியக்காரி ஆண்டுவந்தாள்.
அவளொரு சூனியக்காரி என்பார்கள். ஆனால் அவள் கிழவியல்ல. சகலகலா வல்லி. வீரதீரத்தில் சிறந்தவள். அவளது குதிரை பயங்கரமானது. அதன் கண்கள் சிவந்து இருக்கும். அவளோடு கூடவே ஒரு குட்டிச்சாத்தான் திரியும். அது ஓணானின் சாயலில் இருக்கும். அவளுக்கு அழகான மகள் ஒருத்தி இருந்தாள். அனுக்குய் அவளது பெயர். அவள் ஏழுநிற வானவில்லில் இருப்பாள். வெள்ளி ராட்டையில் தங்க நூலைக் கோர்ப்பாள். அழகான துணிகளை நூற்பாள்.
லோவுஹி அவளை பலசாலிகளுக்கு மணம் முடித்துக் கொடுக்க எண்ணினாள். பலரைத் தெரிவு செய்து மகளிடம் அனுப்பினாள்.
காலெவாலா என்பது சூரிய ஒளிமிக்க நாடு. காலெவாலா நாட்டில் மூன்று வல்லவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். ஒருவனின் பெயர் வாய்மனன். அவன் இசையில் வல்லவன். மற்றவன் இல்மாரினன். அவன் பொறியியல் வல்லுனன். இரும்பினால் பல பொருட்களைச் செய்ய வல்லவன். மூன்றாமவன் லெமின்காய்னன். பலசாலியும் சிறந்த வேட்டைக்காரனும் ஆவான். இவர்களைத் தன்வசப் படுத்தித் தன்பிடியில் வைத்திருக்க லோவுஹி திட்டமிட்டாள்.
வாய்மனன்
வாய்மனன் இசைஞானம் உள்ளவன். இனிமையாகப் பாடுவான். அவனது இசையில் பறவைகளும் விலங்குகளும் மயங்கும். அவன் பாடலை ருசிக்கத் தேடி வரும். அவனால் தனக்குப் பெருமை கிடைக்கும் என நினைந்தாள். அவனை தனது அடிமையாக்க விரும்பினாள். லோவுஹி அவனை தனது மகளுக்கு மணம்முடித்து வைக்க முடிவு செய்தாள்.
வாய்மனனைத் தேடி தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். வாய்மனனும் லோவுஹியின் மகளை நாடி வந்தான். அவளை வாய்மனனுடன் வாழச் செய்தாள். சிறிது காலம் வாய்மனன் அவளோடு வாழ்ந்தான். ஆனால் அவள் வாய்மனனை மதிக்கவில்லை. மந்திரக்காரி லோவுஹி அவனைக் கையாலாகதவன் என்று கேலிசெய்தாள். பல கடினமான வேலைகளைச் செய்யத் தூண்டினாள். தாயும் மகளும் சேர்ந்து கேலி செய்தார்கள். வாய்மனன் நொந்து போனான். எதற்கும் ஓரு
எல்லையுண்டு. அவனுக்கு ஆத்திரம் வந்தது. ஒரு முடிவுக்கு வந்தான்.
“சீ..நீங்கள் பெண்களா? பேய்கள். உங்களோடு வாழ்வது கொடுமை. கூறிக்கொண்டு வெளியேறிவிட்டான்.
இல்மாரினன்.
ஒரு நாள் லோவுஹி இல்மாரினனைச் சந்தித்தாள். அவனது வீரதீரச் செயல்களை லோவுஹி அறிந்திருந்தாள். தனது மகளை இவன் மணம்செய்தால் தனக்கு பேரும் புகழும் கிடைக்கும் என்று எண்ணினாள். அவனால் பல பொருட்களைச் செய்து பொருளீட்டலாம் எனக் கனவு கண்டாள். எப்படியாவது அவனை அழைத்துச் செல்ல முடிவெடுத்தாள். தனது மகளின் அழகைக் கூறிவியந்தாள். தனது விருப்பத்தையும் கூறினாள். இல்மாரினனும் அவள் கூறியதை நம்பினான். அவளது வேண்டுகொளை ஏற்றான்.
லோவுஹி இல்மாரினனை மகளிடம் அழைத்து வந்தாள். மகளை அழைத்தாள். “மகளே இவர் ஒரு பொறியியல் வல்லுனன். இவர் இரும்பு வேலைசெய்வதில் வல்லவர். பொறிகளைத் தயாரிப்பதில் கெட்டிக்காரன். மிகுந்த பலசாலி. அவரது கரங்கள் அற்புதமானவை. அழகான வேலைப்பாடுகளைச் செய்ய வல்லவர். சிறந்த வேட்டைக்காரன்.” என்று புகழ்ந்து தள்ளினாள். அவளும் தாயின் வேண்டுகொளை ஏற்றாள். தனது மகளை இல்மாரினனுக்குத் திருமணம் செய்து கொடுத்தாள். வாழ்க்கை இன்பமாகக் கழிந்தது. நாட்கள் நகர்ந்தன. லோவுஹி மகளை இயக்கினாள். அவள் இல்மாரினனைத் தூண்டினாள். ஒரு பொறியைச் செய்யும்படி வற்புறுத்தினாள். இல்மாரினனும் அதனை ஏற்றுக் கொண்டான்.
இல்மாரினன் ‘சாம்போ’ என்ற மந்திரப் பொறியைச் செய்து கொடுத்தான். அந்தப் பொறி தானாகவே இயங்கியது. அதனுள் ஒன்றையும் போட வேண்டியதில்லை. அப்பொறியிலிருந்து வேண்டியவற்றைப் பெறலாம். மா, அரிசியுடன் பணமும் தந்தது. மாயக்காரி லோவுஹி மகிழ்ந்தாள். ‘சாம்போ’ மந்திரக்காரி லோவுஹிக்கு வேண்டிய அனைத்தையும் கொடுத்தது. லோவுஹிக்கு சந்தோசம். அதனால் தனது மகளை அன்புடன் இருக்குமாறு அறிவுரை செய்தாள். இல்மாரினனும் மகிழ்ந்திருந்தான். ஒருநாள் இல்மாரினன் தனது மனைவியை அழைத்தான். தனது வீட்டுக்குப் போய்ச் சிலநாட்கள் தங்கிவிட்டு வரலாம் என்றான். அவளுக்கும் சந்தோசம். அவளும் சம்மதித்துப் புறப்பட்டாள். இல்மாரினன் வீட்டுக்குப் போனார்கள். அங்கு ஆடுகள் நிறைய இருந்தன. அவற்றை மேய்ப்பதற்கு இடையன் ஒருவன் இருந்தான். இல்மாரினனின் மனைவி பொல்லாதவள். ஆணவம் பிடித்தவள். அவள் சூனியக்காரி லோவுஹியின் மகள் அல்லவா?. ஆடு மேய்ப்பவன் பசியோடு வந்தான். அவன் ரொட்டி கேட்டான். அவள் முகத்தைச் சுழித்தாள். “இந்த இடையனுக்கு நான் ரொட்டி செய்வதா? செய்து காட்டுகிறேன்”; என்று நினைந்து கொண்டு ரொட்டி செய்தாள். அதனுள் சிறுகற்களைப் பொறுக்கிப் போட்டாள். மாவைப் பிசைந்தாள். ரொட்டி செய்தாள். அதனை இடையனிடம் கொடுத்தாள். இடையன் ரொட்டியை உண்டான். கற்கள் கடிபட்டன. அவள் வேண்டுமென்றே செய்ததை உணர்ந்தான். அவனுக்குக் கோபம் வந்தது. தனது ஆடுகளை ஓநாய்களாக மாற்றி விட்டான்.
அவை எஜமானியைக் கடித்துக் குதறின. அனுக்குய் ஆத்திரமடைந்தாள். இல்மாரினனுடன் பெரிய சண்டையிட்டாள். இல்மாரினனைக் கண்டபடி ஏசினாள். வாய்க்கு வந்தபடி திட்டினாள். அவள் தனது தாய் வீட்டுக்குப் புறப்பட்டாள். இல்மாரினன் எவ்வளவோ தடுத்தான். ஆனாலும் அவள் கேட்கவில்லை. தாய்வீட்டுக்குப் போய் விட்டாள்.
இல்மாரினன் இரக்க சுபாவம் உடையவன். அவனுக்குக் கவலை பொங்கியது. தனது மனைவியைத் தேடி வந்தான். லோவுஹி இல்மாரினனைத் திட்டினாள். அவனைத் தகாத வார்த்தைகளால் ஏசினாள். ‘கையாலாகாதவன்’ எனக்கேலி செய்து அனுப்பிவிட்டாள். மனவருத்தத்தோடு இல்மாரினன் போய்விட்டான். மாயக்கிழவி லோவுஹி சந்தோசமாக இருந்தாள். ‘சாம்போ’ அவளிடம் இருந்தது. அவள் சாம்போவினால் சொத்துக்களைச் சேர்த்தாள். மாயக்காரியின் பேராசையை இல்மாரினன் புரிந்து கொண்டான்.
லெமின்காய்னன்
நாட்கள் நகர்ந்தன. லோவுஹி தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றெண்ணினாள். லெமின்காய்னன் பற்றி அறிந்திருந்தாள். லெமின்காய்னன் பயமில்லாதவன். சிறந்த பலசாலி. நல்ல வேட்டைக்காரன். அத்துடன் அவன் சிறந்த போர்வீரன். அவனைப் பற்றி லோவுஹி அறிந்திருந்தாள். தனது மகளை இவன் மணம்செய்தால் தனக்கு பேரும் புகழும் கிடைக்கும். அத்துடன் பாதுகாப்பும் கிடைக்கும் என்று எண்ணினாள்.
எப்படியாவது அவனை அழைத்துச் செல்ல முடிவெடுத்தாள். அவனை அணுகினாள். தனது மகளின் அழகைக் கூறிவியந்தாள். தனது விருப்பத்தையும் கூறினாள். இல்மாரினனும் அவள் கூறியதை நம்பினான். அவளது வேண்டுகோளை ஏற்றான்.
லோவுஹி லெமின்காய்னனை மகளிடம் அழைத்து வந்தாள். மகளை அழைத்தாள். “மகளே இவர் சிறந்தபோர் வீரன். மிகுந்த பலசாலி. அவரது கரங்கள் அற்புதமானவை. அழகான வேலைப்பாடுகளைச் செய்ய வல்லவர். அத்துடன் சிறந்த வேட்டைக்காரன்.” என்று புகழ்ந்து தள்ளினாள். அவளும் தாயின் வேண்டுகோளை ஏற்றாள். தனது மகளை லெமின்காய்னனுக்குத் திருமணம் செய்து கொடுத்தாள். வாழ்க்கை இன்பமாகக் கழிந்தது. நாட்கள் நகர்ந்தன. லோவுஹி மகளை இயக்கினாள். லெமின்காய்னன் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தான். நாட்கள் நகர்ந்தன. லோவுஹி லெமின்காய்னனைப் பல கடினமான வேலைகளைச் செய்யத் தூண்டினாள்.
லெமின்காய்னன் லோவுஹியின் திட்டங்களை அறிந்திருந்தான். மாயக்கிழவி அவனை நையாண்டியும் கேலியும் செய்யத் துணிந்தாள். அவனுக்கு வெறுப்பு வந்து விட்டது. அவள் சொல்வதை ஏறெடுத்தும் பார்க்காதிருந்தான். தனது திட்டப்படி வேலைசெய்ய மறுத்த லெமின்காய்னனையும் துரத்தி விட்டாள். லெமின்காய்னன் மனம் வருந்தி தான் செய்த தவறை உணர்ந்தான். அவனும் வெளியேறிவிட்டான்.
லோவுஹியிடம்பொருள்வளம் இருந்தது. ‘சாம்போ’ வேண்டியவற்றைக் கொடுத்தது. ஒரு சர்வாதிகார மகாராணிபோல் வாழ்ந்தாள். அவளிடம் போர்வீரர்கள் இருந்தார்கள். மக்களையும் தன்வசப் படுத்தினாள். அவளது கொடுமையைப் பொறுக்காத மக்கள் வருந்தினார்கள்.
இல்மாரினன் வாய்மனிடம் சென்றான். அவர்கள் இருவரும் லெமின்காய்னனைச் சந்தித்தார்கள். தங்களுக்கு லோவுஹி செய்த கொடுமைகளை நினைத்து வருந்தினார்கள். மூவரும் மாயக்கிழவி லோவுஹியைப் பழி வாங்க நினைத்தார்கள். அவளை எதிரக்கத் திட்டமிட்டார்கள். ‘சாம்போவை’ மீட்டெடுக்கும் வழிகளை ஆராய்ந்தார்கள். இச்செய்தியை லோவுஹி அறிந்தாள். அவர்கள் எதிர்க்குமுன் தான் தயாராகிவிட்டாள். லோவுஹி மூர்க்கமடைந்தாள். பணமிருந்தால் பத்தும் செய்யலாம். அட்டகாசமாகச் சிரித்தாள்.
பொஹ்யொலா மக்களை ஏவினாள். அவர்களுக்குப் பணத்தினை அள்ளிக் கொடுத்தாள். மக்களும் அவள் பக்கமே நின்றார்கள். மக்களும் பலசாலிகளை எதிர்க்கப் புறப்பட்டனர். மக்கள் மூர்க்கத்தோடு புறப்பட்டார்கள். அவர்களது கைகளில் ஆயுதங்கள் இருந்தன. போர்வீரர்களையும் அனுப்பினாள். வாய்மனன் இதனைக் கண்டு கொண்டான். அவன் அந்த மக்களை நோகவில்லை. இப்போது வாய்மனன் தனது வல்லமையைக் காட்டினான். அவன் தனது இசைக்கருவியை எடுத்தான். இனிய பாடலைப் பாடினான். பாடல் காற்றில் பரவியது.
என்ன அதிசயம்? கோபாவேசத்தோடு வந்தவர்கள் அப்படியே நின்றார்கள். பாடலின் இசை அவர்களை மெய்மறக்க வைத்தது. வந்த வேலையை மறந்தார்கள். அப்படியே உறங்கி விட்டார்கள்.
மூவரும் விரைந்தார்கள். சாம்போவைத் தூக்கிப் படகில் ஏற்றினார்கள். படகு விரைந்து சென்றது. சூனியக்காரி லோவுஹி ஆத்திரமடைந்தாள். அவர்களைத் துரத்த ஆரம்பித்தாள்.
பனி மூட்டத்தை ஏவிவிட்டாள். பனிமூட்டம் படகைச் சூழ்ந்து கொண்டது. படகு திசைதெரியாது திக்குமுக்காடியது. வாய்மனன் வாளை எடுத்தான். பனிமூட்டத்தைச் சாடினான். பனிமூட்டம் கலைந்தது. ஆவேசம் கொண்ட லோவுஹி அலைகளைத் தூண்டினாள்.
பேரலைகள் ஆர்ப்பரித்தன. படகைத் தாக்கின. அலைகளை எதிர்த்துப் படகைச் செலுத்தினார்கள். லோவுஹி காற்றை அழைத்தாள். கடுமையாகத் தாக்கக் கட்டளையிட்டாள். காற்று வீசியது. எனினும் படகு காற்றின் எதிர்திசையில் விரைந்தது. போர் வீரர்களையும் ஏவினாள். பெரும் சண்டை நடந்தது. படகு உடைந்தது. பலசாலிகள் உயிர் தப்பிச் சென்றார்கள். சாம்போ உடைந்து கடலில் வீழ்ந்தது.
வாய்மனன் முதிர்ந்த ஞானி அல்லவா? அவன் சாம்போவின் பாகங்களைத் தேடிப்பிடித்தான். ஒன்று சேர்த்தான். சாம்போ உருவாகி இயங்கியது. “காலெவாலா நாட்டில் மகிழ்ச்சி நிலவும்” என்றான். சூரியனும், சந்திரனும் வந்தன. அவ்வளவுதான். அங்கு உறைபனி உருகியது. வரட்சி பறந்தோடியது. மரங்கள் துளிர்விட்டன. பசுமை இலைகள் காற்றில் அசைந்தன. மரஞ்செடி கொடிகளில் மொட்டுக்கள் நிறைந்தன. பூக்கள் மலர்ந்தன. காய் கனிகள் தொங்கின. வயல்கள் விளைந்து கூத்தாடின. பறவைகள் பாடின. மக்கள் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கியது. எங்கும் சந்தோசம் பொங்கியது.
லோவுஹி சாம்போவை இழந்ததால் ஆத்திரம் அடைந்தாள். வல்லவர் மூவரையும் பழி வாங்கும் திட்டத்தில் இறங்கினாள். மாயக்காரி லோவுஹி சந்தர்ப்பத்தைப் பார்த்தி ருந்தாள். அவள் மனதில் பழிவாங்கும் உணர்வு வளர்ந்தது. யாருமே எதிர்பார்க்காத திட்டத்தைத் தயாரித்தாள். மூவரையும் வேவு பார்த்தாள். வாய்மனன் அடிக்கடி பாடி உயிரினங்களை மகிழ்வித்து வந்தான். அதனைத் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தக் காத்திருந்தாள். வாய்மனன் காட்டில் பாடும் நாளைத் தேர்ந்தெடுத்தாள்.
ஒருநாள் வாய்மனன் மெய்மறந்து பாடினான். அந்தப் பாடல் அற்புதமாக இருந்தது. சகல உயிரினங்களும் கூடியிருந்து ரசித்தன. உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன. சூரியனும் சந்திரனும் கீழிறங்கி வந்தன. மரக்கிளைகளில் அமர்ந்தன. பாடலை மெய்மறந்து ரசித்தன. மெதுவாக சூனியக்காரி லோவுஹி வந்தாள். சூரியனையும் சந்திரனையும் சிறைப்பிடித்தாள். அப்படியே தூக்கிக் கொண்டு போனாள்.
பூமிக்கடியில் ஒரு அறை இருந்தது. அந்த அறையில் போட்டுப் பூட்டிவிட்டாள். சூரியனும் சந்திரனும் எங்கே?. வானில் அவற்றின் பவனி இல்லை. சூரிய ஒளியில்லை. சந்திரனின் சுடரில்லை. இருளும் குளிரும் வந்தன. வெப்பம் இல்லை. உறைபனி உறைந்தது. பூமி அழுதது. காடு மலைகள் இருண்டு கிடந்தன. காலெவாலா நாடு வாடியது. சூனியக்காரி லோவுஹி மகிழ்ந்தாள்.
சூனியக்காரி லோவுஹிவுக்கு மனதில் பயமிருந்தது. பலசாலிகளை நினைத்தாள். அவர்கள் வந்தால் என்ன செய்வது.? அவர்கள் இந்தக் குளிரில் மாண்டிருப்பார்கள். இனியெங்கே வரப்போகிறார்கள். எனினும் அவள் அடிக்கடி குழம்பினாள். அவர்களைப் போய்ப் பார்த்தால் என்ன? ஒரு கழுகாக மாறினாள். காலெவாலா நாட்டுக்குப் பறந்து போய்த் தேடினாள்.
இல்மாரினனைக் கண்டாள். இவன் சாகவில்லையே. அவள் அவனருகில் கழுகாகச் சென்றாள். அவன் பட்டறையில் வேலையில் ஈடுபட்டிருந்தான். கழுகு அவன் பக்கத்தில் போயிருந்தது. உற்றுப்பார்த்தது. “நீ என்ன செய்கிறாய்.”? கழுகு கேட்டது. “கழுத்துப் பட்டை செய்கிறேன்.” என்றான். “எதற்காகச் செய்கிறாய்”;? கழுகு தொடர்ந்தது. “பொல்லாத மாயக்கிழவி லோவுஹி இருக்கிறாள். அவளைப் பிடிக்கப் போகிறோம். அவள் தப்ப முடியாது. மலையடிவாரத்தில் இரும்புப் பாறை இருக்கிறது. அதில் மாயக்கிழவி லோவுஹியின் கழுத்தில் இதனை மாட்டிவிடுவோம். பின் அவளைப் பிடித்துச் சங்கிலியால் பிணைத்து கட்டப்போகிறோம்”. என்றான். அவனைப் பயத்துடன் உற்றுப்பார்த்தாள். புறப்பட்டு விட்டாள்.
பலசாலிகள் முன் தான் தோற்றுவிட்டதை உணர்ந்தாள். குளிரும் இருட்டும் அவர்களைக் கொல்லவில்லை. தனது நாட்டுக்குப் பறந்தாள். பூமியடி அறைக்குப் போனாள். அறையைத் திறந்தாள்.
“நீங்கள் போகலாம்.” என்று சூரியனையும் சந்திரனையும் விடுவித்தாள். சூரியனும் சந்திரனும் வானில் பவனி வந்தன. அவற்றைப் பார்த்து மக்கள் ஆரவாரித்தனர்.
காலெவாலா நாட்டில் ஒளிபரந்தது. மக்கள் மகிழ்ந்தார்கள். குளிரையும் இருளையும் வெற்றி கொண்டார்கள். அவர்கள் சூனியக்காரி லோவுஹியைக் கண்டு பயப்படுவதில்லை. இப்போது சூரியன் மலைகளில் மறைந்தாலும் அவர்களுக்குப் பயமில்லை.
சோலும் மானியும்.
இக்கதையும் சூரியனையும் சந்திரனையும் பற்றியது. ஸ்கன்டிநேவியா நாட்டில் நிலவுகிறது. கேட்பதற்கு நல்ல கதை. வாசிப்பதற்கு ஏற்றது. கற்பனையை வளர்க்க வல்லது. வாசித்துப் பார்ப்போமா?
முற்காலத்தில் சூரியனோ சந்திரனோ இல்லை. பூமியில் இருட்டின் ஆட்சி நிலவியது. எங்கும் இருளாக இருந்தது. வெப்பம் இல்லை. காற்று வீசுவதில்லை. மரஞ்செடிகள் அசைவதில்லை. மரங்கள் உயிர்ப்பற்று நின்றன. இலைகளோ, பூக்களோ இல்லை. புல்பூண்டுகள் வளரவில்லை. மனிதர்கள் கஸ்டமான வாழ்க்கையை நடத்தினர். விலங்குகளும் துன்புற்றன. பறவைகள் பாடுவதில்லை. பூக்கள் மலர்வதில்லை. ஆறுகள் சலசலத்து ஓடுவதில்லை. இதனையிட்டு மனிதர்கள் தேவர்களுக்கு முறையிட்டார்கள். அவர்களது வேண்டுதலைத் தேவர்கள் உணர்ந்தனர்.
தேவர்கள் ஒன்றுகூடினார்கள். தேவர்கள் வல்லமையுடையவர்கள். மந்திர தந்திரங்கள் தெரிந்தவர்கள். சேர்ந்து ஆலோசித்தார்கள். தேவலோகத்தில் ஓதின் என்ற தேவன் இருந்தான். அவன் தனது சகோதரர்களை அழைத்தான். அவர்களோடு நெருப்பு நாட்டுக்குச் சென்றான். பலநாட்களின் முயற்சியின் பின் நெருப்பைக் கண்டார்கள். அங்கிருந்து நெருப்பை எடுத்து வந்தார்கள்.
பலநாட்களாகக் கடும்முயற்சி செய்தார்கள். ஒரு சூரியனைச் செய்தார்கள். அது கதகதப்பாக இருந்தது. அதனைச் சோல் என்று பெயரிட்டு அழைத்தார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். சந்திiனைப் பற்றிச் சிந்தித்தார்கள். ஆறுதலாக இருந்து சந்திரனைச் செய்தார்கள். அதற்கு மானி என்று பெயரிட்டார்கள்.
அது தண்மையாகவும் அழகாகவும் இருந்தது. அவர்களது படைப்பில் இவை அற்புதமானவையாக இருந்தன. இவற்றால் பூமிக்கு நன்மை உண்டாகும் என்று நினைத்தார்கள். இவை வானத்தில் வந்தால்தான் பூமிக்கு நன்மை கிடைக்கும். எப்படி இவற்றை வானத்துக்கு எடுத்துச் செல்வது. யாரால் முடியும். வல்லமை படைத்தவர்களால்தான் முடியும். பல தேவர்கள் வந்து பார்த்துச் சென்றார்கள்.
இவற்றை எடுத்துச் செல்ல இரண்டு திறமையானவர்கள் வேண்டும். அவர்களைத் தேடும் படலத்தில் இறங்கினார்கள். பலநாட்களாகத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்கள். எங்கு தேடியும் பயனில்லை. ஈற்றில் பூமியில் ஆதனைப் பற்றி அறிந்தார்கள்.
பூமியில் ஆதன் இருந்தான். தேவர்களின் அற்புதப் படைப்பைக் கேளிவியுற்றான். தேவர்கள் இரண்டு பொருட்களைச் செய்துள்ளமையை ஆதன் அறிந்திருந்தான். அவற்றின் செயற்பாட்டையும் கேள்விப்பட்டான். ஆதனுக்கு இரு குழந்தைகள் இருந்தார்கள். அந்தப் பொருட்களின் பெயரை
வைக்கத் தீர்மானித்தான். முதற்குழந்தை ஆண். அவனுக்குச் சோல் என்று பெயரிட்டான். சோல் என்பது சூரியனைக் குறிப்பது. இரண்டாவது பெண் குழந்தை. அவளுக்கு மானி என்று பெயரிட்டான். மானி என்பது சந்திரனைக் குறிப்பதாகும். குழந்தைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தார்கள்.
குழந்தைகள் இருவரும் மிகவும் அழகாகனவர்கள். தேவர்களை விடவும் அழகானவர்கள். பூமியில் அவர்களை விடவும் அழகானவர்களே இல்லை. தேவலோகத்திலும் இல்லை. அதனால் தந்தை தலைக்கனம் கொண்டிருந்தான். அகங்காரம் தேவர்களுக்குப் பிடிக்காதது. அவனது தலைக்கனத்தைக் குறைக்க வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்தார்கள். தேவர்கள் அவனைத் தண்டிக்க எண்ணினார்கள்.
ஓதின் தனது பரிவாரங்களோடு பூமிக்கு வந்தார். சோலையும் மானியையும் பிடித்தார். தேவலோகத்துக்கு அழைத்து வந்தார். ஓதினிடம் தங்கத்தேர் இருந்தது. அந்தத் தேரில் நான்கு வெண்குதிரைகள் பூட்டப்பட்டன. சோலை அழைத்தார்கள். அவன் செய்ய வேண்டியவற்றை விளக்கினார்கள். அதில் சோல் என்ற சூரியனை ஏற்றினார்கள். அந்தத் தேரை சோல் ஓட்டினான். சோல் என்ற சூரியன் கிழக்கிலிருந்து புறப்பட்டான். ரதம் வானை நோக்கி விரைந்தது. சோல் என்னும் சூரியன் வானில் பவனி வந்தான். வெயில் பூமியைத் தொட்டது. பூமி இயக்கம் கொண்டது.
வயல்கள் விளைந்தன. மரங்கள் பூத்தன. காய்களும் பழங்களும் தோன்றின. பூக்கள் மலர்ந்தன. காற்றசைந்தது. ஒலி பிறந்தது. மக்கள் மகிழ்ந்தனர். ஒரு நாட்பயணத்தின் பின் சூரியன் மேற்காக மறைந்தான்.
மானிக்கும் தங்கரதம் கொடுபட்டது. சந்திரனை ரதத்தில் ஏற்றினார்கள். சோலைப்போல் கிழக்கிருந்து சந்திரனின் பயணம் தொடங்கியது. மானி ரதத்தில் முன்னிருக்கையில் இருந்தாள். மானி குதிரைகளை முடுக்கினாள். குதிரைகள் வானில் விரைந்தன. பூமியில் நிலவொளி பரவியது. எங்கும் மகிழ்ச்சியின் ஆட்சி. இரவு முழுவதும் ஓய்வில்லாப் பயணம். மானியின் ரதமும் மேற்காகச் சென்று மறைந்தது.
சோலுக்கு இரவு மட்டுமே ஓய்வு. மானிக்கு பகல் மட்டுமே ஓய்வு. எப்போதாவது வெகு தூரத்தில சோலின் உருவம் தெரியும். அப்போது மானி கையசைத்துக் கொள்வாள்.
சகோதர பாசம் அவர்களைப் பிணைக்கும். மானியைக் கண்ட சந்தோசத்தில் சோலும் கையசைப்பான்.
எப்போதாவது நெஞ்சு பொறுக்காமல் அழுவார்கள். அப்போது புகைமூட்டம் சூழ்ந்திருக்கும்.
கிர்கிஸ்யா நாட்டில் நிலா.
சோவியத் நாட்டின் தெற்கே கிர்கிஸ்யா நாடு உள்ளது. அங்குள்ள மக்கள் சந்திரனைப் பற்றி இவ்வாறு கூறுவார்கள். சந்திரனை அவர்கள் பெண்ணாகக் கருதுகிறார்கள். கிர்கிஸ்யா நாட்டில் தனவந்தர் ஒருவர் வாழ்ந்தார்.
அவர் பெரிய பணக்காரர். அவருக்கு அழகான மகள் இருந்தாள். அவளது முகம் ஒளிவீசும். கண்கள் பளபளக்கும். உடல் தங்கம்போல் மின்னும். அவளுக்கு நிலா என்று பெயரிட்டனர். நிலா பேரழகியாக இருந்தாள்.
அவளை மணம்செய்யப் பலர் முன்வந்தனர். ஆனால் அவர்களை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவள் ஒரு மாலுமியைக் காதலித்தாள். அவனும் அவளை நேசித்தான்;. ஆனால் அவளது தந்தை எதிர்ப்புத் தெரிவித்தார். ஊர் பேர் தெரியாத மாலுமியை அவர் வெறுத்தார்.
மாலுமி மனமுடைந்தான். பேரும் புகழும் இ;ல்லாததால்தானே இந்த நிலை?. அவனுக்குக் கவலையாக இருந்தது. கடுமையாக யோசித்தான்.தூரநாட்டுக்குச் சென்று வீரதீரச் செயல் புரியவேண்டும். மாபெரும் வீரனாகத் திரும்ப வேண்டும். பேரும், பொருளும் புகழும் தேடவேண்டும். தான் செல்வந்தனாக வந்தால் மறுப்பு இருக்காது. நிலாவின் தந்தை ஏற்றுக் கொள்வார். இது அவனது பெருவிருப்பாக மாறியது. நிலாவிடம் தனது முடிவைச் சொன்னான். அவள் அழுதாள். தனது தந்தையின் மனதை மாற்றுவதற்கு வேறுவழி தெரியவில்லை. எப்படிப் பிரிந்து வாழ்வது? எனினும் அவனது விருப்பத்துக்கு அவள் தடைபோடவில்லை. “நான் திரைகடல் தாண்டிச் சென்று பொருள் தேடப்போகிறேன். உனது தந்தையின் முன் செல்வந்தனாக வருவேன். அப்போது அவர் நமது திருமணத்துக்குத் தடைபோட மாட்டார். நீ கவலையை மறந்து இரு” என்றான். அவள் கண்ணீர் விட்டாள். அவன் விடை பெற்றுச் சென்றான்.
தூரதேசம் நோக்கிக் கடலில் பயணமானான். நாட்கள் நகர்ந்தன. காலங்கள் புரண்டோடின. அவன் வரவே இல்லை. நிலா அழுதாள். கடற்கரைக்கு வருவாள். அவன் வருகிறானா எனத் தேடுவாள். ஏங்கி அழுவாள். ஆனாலும் அவன் வரவே இல்லை. கோமானாகிய அவள் தந்தை இறந்துவிட்டார். ஆடம்பரமான மாளிகையில் நிலா மட்டுமே இருந்தாள். நிலா திருமண ஆடையை அணிவாள். கடற்கரைக்குச் செல்வாள். தனது மனம் கவர்ந்தவனைத் தேடுவாள். தொலைதூரத்தை நோக்குவாள். ஏமாற்றத்தோடு ஏங்குவாள். ஒவ்வொரு இரவும் தங்கப் படகில் ஏறுவாள். நட்சத்திரத் தோழிகளுடன் தனது காதலனைத் தேடுவாள். தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கிறாள். அதனால்தான் வெளிறிப் போய் வருத்தமாக உள்ளாள். இப்படிச் சந்திரனின் கதை செல்கிறது.

வானத்தில் சூரியனும் சந்திரனும்.
தென்னாபிரிக்காவில் நைஜீரியா என்ற நாடு இருக்கிறது. அங்கு சூரியனையும் சந்திரனையும் கணவன் மனைவியாகப் பார்க்கிறார்கள். அக்கதையைப் பார்ப்போம்.
சூரியனின் மனைவிதான் சந்திரன். சூரியன் தனது மனைவி சந்திரனோடு பூமியில் சந்தோசமாக வாழ்ந்தார். அவர்களுக்கு அழகான வீடு இருந்தது. இல்லறம் சந்தோசமாக நடந்தது. விருந்தோம்பல் நடக்கும். அவர்களது வீட்டுக்கு அடிக்கடி நண்பர்கள் வருவார்கள். ஒரே கொண்டாட்டமாக இருக்கும். தண்ணீர்க் கடவுளும் இருந்தாற்போல் வருவார். விருந்துண்பார். பின் சென்றுவிடுவார். அவரை வெள்ளம் என்று அழைத்தார்கள்.
கொஞ்ச நாட்களாக அவரைக் காணவில்லை. ஒருநாள் சூரியன் அவரைக் கண்டார். “ஹலோ நண்பரே! என்ன எங்கள் வீட்டுப் பக்கம் வரக்காணோம்? ஒரு நாளைக்கு வாருங்களேன்” என்றார். திருவாளர் வெள்ளத்துக்குச் சந்தோசம். “வரலாம்தான். நேரம் கிடைப்பதில்லை.” எனத் திருவாளர் வெள்ளம் கூறியது. “நேரம் கிடைக்கும்போது வாருங்கள்”. சூரியன் அழைப்பு விடுத்தது.ஒருநாள் நண்பர் வெள்ளம் அவர்களது வீட்டுக்கு வந்தார். கூடவே தனது நண்பர்களையும் அழைத்து வந்தார்.
அந்த நண்பர்கள் வேறு யாருமல்ல. நீர்வாழ் உயிரினங்கள்தான். மீன்களும், ஏனைய நீர்வாழ் உயிரினங்களும் வந்தன. வீடு நிறைந்துவிட்டது. வீடு முட்டப்பரவியது. இடமின்மையால் கணவனும் மனைவியும் கூரையில் ஏறினரகள்;. கூரையையும் மூடி வெள்ளம் வந்தது. அவர்களால் பொறுக்க முடியாது போய்விட்டது.
“உங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து சென்று வாருங்கள்”;. என்று சூரியன் கூறியது. திருவாளர் வெள்ளம் அதற்கு மறுப்புத் தெரிவித்தது. வெள்ளம் மென்மேலும் வந்தது. வெள்ளத்தில் நண்பர்களும் வந்தார்கள். நண்பர்களுக்கு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தனர். செய்வதற்கு வேறு வழியுமில்லை. “நீங்களே இனி இந்த வீட்டில் இருங்கள். நாங்கள் போகிறோம். என்னால் இங்கு இருக்க முடியாது. நான் வெளியேறுகிறேன்” சந்திரன் கூறிக்கொண்டு ஒரு தாவுத் தாவியது. வானில் வெகுதூரம் சென்று விட்டது.
“நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வது. நானும் வருகிறேன். சூரியனும் பின்னால் சென்றது.” ஆனால் இருவரும் வெகுதூரத்துக்குச் சென்றுவிட்டார்கள். வெகுதூரத்தில் இருந்து ஆளையாள் பார்த்துக் கௌ;வார்கள். இருவரும் இதுவரை ஒன்;றாகச் சேரவில்லை.
வானிலிருந்து தங்கள் நண்பர்களைப் பார்ப்பார்களாம். அவர்களோடு உரையாடுவார்களாம். அவர்களது சந்தோசத்தில் இன்பம் காண்பார்களாம். அப்படியே வானத்தில் நிரந்தரமாகத் தங்கி விட்டார்களாம். அவர்களுக்கு வெள்ளத்தின் தொந்தரவுகள் இப்போது இல்லையாம்.
சந்திரப் பெண்ணின் கதை
அமெரிக்க நாட்டில் இப்படியொரு கதை வழங்குகிறது. சந்திரன் என்ற நிலா அழகிய பெண்ணாக இருந்தாள். அவளைச் சூரியன் திருமணம் செய்தார். அவர்களுக்கு நிறையக் குழந்தைகள் இருந்தனர். அவைதான் வானத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள். சூரியன் நட்சத்திரக் குழந்தைகளைத் துரத்தும். பிடிபட்ட குழந்தைகளை விழுங்கி விடுவிடும்.
சூரியனைக் கண்டால் குழந்தைகளுக்குப் பயம். பகலில் சூரியன் வானவீதியில் வரும். அப்போது நடசத்திரக் குழந்தைகள் வானில் ஓடி ஒளிந்து கொள்ளும். அதனால்தான் நட்சத்திரங்கள் பகலில் தெரிவதில்லை.
நிலா சூரியனிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முனைந்தாள். பலவழிகளைத் தேடினாள். சூரியன் நட்சத்திரக் குழந்தைகளை வேட்டையாடிவிடும். அப்போது சந்திரன் மனம் வருந்தும். துக்கத்தோடு வாடியிருக்கும். இது தொடர்கதையாக இருக்கும். அதனால் ஓவ்வொரு மாதமும் முகத்தை ஒருபக்கம் வைத்துக் கொள்ளும். அப்பொழுது தேய்பிறையாகத் தெரியும். எப்படியோ நட்சத்திரக் குழந்தையைச் சூரியன் வேட்டையாடி விடும்.
ஒரு மாதத்தில் ஒரு நட்சத்திரக் குழந்தைiயாயவது பிடித்து விழுங்கிவிடும். அந்த நாளில் சந்திரன் வெளியே வருவதில்லை. வீட்டினுள் அடைந்து கிடக்கும். அன்றுமுழுதும் சந்திரன் வெளியே வருவதில்லை குழந்தைகளை இழந்த துக்கத்தில் இருப்பாள். அன்று அமவாசையாகும். இரவுவேளையில் சூரியன் உறங்கிவிடும். அப்போது நிலா தனது நட்சத்திரக் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வாளாம்.
சகோதரர் சண்டை.
கெனியா என்பது கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள நாடு. அங்கே சந்திரனும் சூரியனும் சகோதரர்களாக விளங்கினார்கள். சந்திரன் மூத்தவர். மகவும் அழகானவர். தங்கமாக ஜொலிப்பவர். அவரது ஒளியில் பலர் மயங்கினார்கள். அவரைப் புகழ்ந்தார்கள். சூரியன் இளையவர். அழகில் குறைந்தவர். அதனால் சூரியனுக்குப் பொறாமையாக இருந்தது. அடிக்கடி சூரியன் சந்திரனோடு சண்டை பிடிப்பார். ஒருநாள் கடும் சண்டை நடந்தது. இருவரும் கட்டிப்பிடித்துப் புரண்டார்கள். மல்யுத்தம் நடந்தது.
சூரியன் கோபத்தோடும் வேகத்தோடும் சண்டையிட்டார். சந்திரனைச் சேற்றுக்குள் தள்ளி விட்டார். சந்திரன் சேற்றில் புதையுண்டார். மெதுவாக எழுந்தார். அவரது ஒளி மங்கியது. மக்கள் வேதனையடைந்தார்கள்.
சண்டை ஓயவில்லை. மக்களும் தேவர்களும் கடவுளிடம் முறையிட்டார்கள். அவர் இருவரையும் சமாதானப் படுத்தினார். இருவரையும் எச்சரித்தார். சூரியனைப் பார்த்து “நீ பகலில் மட்டும் வெளியில் வானவீதியில் வரவேண்டும்.” என்றுசொன்னார். சந்திரனைப் பார்த்தார். “இரவில் திருடர்களும், சூனியக் காரர்களும் திரிவார்கள். அவர்களது தீயசெயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு உனது இந்த ஒளிதான் ஏற்றது. அதனால் நீ இரவில் பிரகாசிக்க வேண்டும்”. என்று கட்டளை இட்டார்.
“இருவரும் ஒன்றாக இருந்தால் சண்டை பிடிப்பீர்கள். அதனால் உங்களைப் பிரித்து வைக்கின்றேன்”;. என்று பிரித்துத் தூரத்தில் வைத்தார்.
கடவுளின் கட்டளையைச் சிரமேற்கொண்டார்கள். சூரியன் பகலில் வானவீதியில் பிரகாசிக்கிறது. சந்திரன் இரவில் வானவீதியில் பிரகாசிக்கிறது.
நிலாப் பெண்
இந்தோனேசியாவில் வேடிக்கையான கதையுண்டு. ‘நவங் வுலன் ’ என்ற சந்திரத் தேவதை இருந்தாள். அவள் பூவுலகில் உள்ள ஏரியில் குளிக்க வருவது வழக்கம். அன்னத்தின் இறக்கையினாலான போர்வையுள் புகுந்து பூமிக்கு வருவாள். இதனைப் பலர் கண்டார்கள். அவளிடம் பல சக்திகள் இருந்தன. ஒரு தானிய மணியிருந்தால் போதும். ஆயிரம் பேருக்குச் சமைத்துப் போடுவாள். அவளது சக்தியை எவராவது பார்த்தால் அந்தச் சக்தியை அவள் இழந்துவிடுவாள்.
குவான் அழகிய வாலிபன். கற்பனை மிக்கவன். ‘நவங் வுலன் ’ என்ற சந்திரத் தேவதையைப் பற்றி அறிந்திருந்தான். அவளைப் பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தான்.
ஒருநாள் அவள் பூமிக்கு வந்தாள். தனது போர்வையைக் கழற்றி வைத்துவிட்டு நீராடினாள். இதனை குவான் நோட்டம் விட்டான். மெதுவாக குவான் வந்தான். அவளது போர்வையை எடுத்துக் கொண்டு தனது வீட்டுக்கு ஓடினான். அதனை ‘நவங் வுலன்’ கண்டு கொண்;டாள். அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள். அவன் அதனை ஒளித்து விட்டான். அவள் அழுது புலம்பினாள். தனது ஆடையில்லாது அவளால் தனது உலகத்துக்குப் போகமுடியாது.
‘நவங் வுலன்’ குவானோடு தங்கிவிட்டாள். அவனோடு வாழ்க்கை நடத்தினாள். அவனது நண்பர்கள் வந்தார்கள். அனைவரையும் அனுசரித்து விருந்தோம்பினான். தனது மனைவியைப் பற்றிப் புகழ்ந்தான். தனது மனைவி அத்தனை பேருக்கும் சமையல் செய்து விருந்தோம்புவது குவானை பிரமிக்கச் செய்தது. குவானுக்கு ஆச்சரியம். தனது வருவாய்க்கு இது எப்படிக் கட்டுப்படியாகும்.? யோசித்தான். எப்படி இவள் சமைக்கிறாள் என்பதை ஒளிந்திருந்து பார்த்தான்.
‘நவங் வுலன்’ ஒரு தானிய மணியை எடுப்பாள். அதனைக் கொண்டே பலருக்குச் சமைத்தாள். அவனுக்கு வியப்பு. அவள் எப்படிச் சமைக்கிறாள் என்பதை பார்க்க அவாக் கொண்டான். ஒரு நாள் அவள் சமைக்கும்போது எட்டிப்பார்த்தான். அவ்வளவுதான். அவளது சக்தி மறைந்து விட்டது.
இப்போது அவளால் அப்படிச் செய்யமுடியவில்லை. மற்றப்பெண்களைப் போல் இயங்கினாள். குவான் தனது மனைவியை வருத்தினான். மற்றப் பெண்களைப்போல் தானியங்களை உரலில் போட்டுக் குற்றிச் சமைத்தாள். ‘நவங் வுலன்’ வருந்தினாள். கவலையில் ஆழ்ந்து போனானள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
ஒருநாள் தனது வேலையில் ஆழ்ந்திருந்தாள். சமையலுக்கான பொருட்களைத் தேடினாள். வீட்டினுள் நுழைந்து பார்த்தாள். தற்செயலாக தனது போர்வையைக் கண்டு கொண்டாள். எடுத்துப் போர்த்தினாள். அவ்வளவுதான். எடுத்துப் போர்த்தினாள். பறந்துவிட்டாள். ஆனால் அவளால் அங்கு நிம்மதியாய் இருக்க முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாய் மாறினாள். இரவில் தனது உலகத்தில் பிரகாசித்தாள். பகலில் பூவுலகத்தில் தனது கணவனுடனும் குழந்தையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
சீனாவில் சந்திர விழா.சீனா தேசத்தை ஜேட் மன்னன் ஆண்டார். அப்பொழுது பத்துச் சூரியர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளாக வந்து வானில் பிரகாசித்துச் சூரிய சக்தியைக் கொடுத்தார்கள். பயிர்கள் நன்றாக விளைந்ன. மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பஞ்சம் இல்லை. மக்கள் சந்தோசமாக மகிழ்ந்திருந்தார்கள்.சூரியர்களுக்கு ஒரு ஆசை பிறந்தது. ஒரே நாளில் பத்துப்பேரும் வானவீதியில் ஒன்றாக வரும் எண்ணம் உதயமாகியது. ஒருநாள் பத்துப்பேரும் ஒன்றுசேர்ந்தார்கள். அவர்களுக்கு ஓரே சந்தோசம். வான்வீதியில் பத்துப்பேரும் ஒரே நேரத்தில் வந்தார்கள்.திடீரென எல்லாம் மாறின. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. மரஞ்செடி கொடிகள் வாடின. பயிர்கள் கருகியழிந்தன. உயிரினங்கள் பதைபதைத்தன. மக்கள் வாடினர். ஜேட் மன்னன் கோபம் கொண்டார்.பத்துச் சூரியர்களையும் தண்டிக்க வேண்டும் என்றார். சீனாவில் ஹொயுய் என்றொரு வீரன் இருந்தான். அவனது மனைவி சேஞ்ஜி அழகானவள். அவர்கள் இருவரும் சந்தோசமாக இருந்தார்கள்.ஹொயுய் சிறந்த வேட்டைக்காரன். வில்லில் அம்பைப் பூட்டினால் குறிதவறாது. நமது வல்வில் ஓரியைப் போன்றவன். அவனை அழைத்தார். ஒன்றாகத் தோன்றி வெப்பத்தை அளிக்கும் சூரியர்களைத் தண்டிக்கப் பணித்தார்.ஹொயுய் தனது வில்லை வளைத்தார். ஒவ்வொரு சூரியனாக வீழ்த்தினான். ஒரு சூரியனை உலகமக்களுக்காக எஞ்சவிட்டான். ஜேட் மன்னர் ஹொயுய் வீரனைப் பாராட்டிப் பரிசளித்தார். அவனுக்கு ஒரு மாத்திரையை அன்பளிப்புச் செய்தார். அது சிரஞ்சீவி மாத்திரை. அதனை உண்பவருக்கு மரணம் இல்லை. அதனைக் கொடுக்கும்போது “ஹொயுய், இது சிரஞ்சீவி மாத்திரை. இதன் பாதியை நீ சாப்பிட்டாலே போதும். உனக்கு மரணம் இல்லை. இதனை உடனேயே சாப்பிடக் கூடாது. ஒரு வருசமாக நீ விரதமிருந்து பிரார்த்திக்க வேண்டும். ஒரு வருடம் கழித்ததும் சாப்பிடலாம்” என்று கூறிக் கொடுத்தார்.ஹொயுய் நன்றியுடன் பெற்றுக் கொண்டான். வீட்டுக்கு எடுத்துச் சென்றான். அதனை ஒரு சிறிய பெட்டியுனுள் வைத்தான். அதன் மகத்துவத்தைப் பற்றி மனைவி சேஞ்ஜியிடம் சொன்னான். ஒரு வருடம் முடிந்தபின் இருவரும் உண்ணுவோம். என்று கூறினான். பின் யாருக்கும் தெரியாத இடத்தில் அதனைப் பத்திரமாhக வைத்தான். பலநாட்கள் சென்றன. ஹொயுய் அடிக்கடி ஜேட் மன்னர்pன் அழைப்பை ஏற்றுச் செல்வான். அன்றொரு நாள் ஜேட் மன்னனின் அழைப்பை ஏற்றுச் சென்றான். வீட்டில் அவனது மனைவி வேலைகளில் மூழ்கியிருந்தாள். தற்செயலாக ஒரிடத்தில் இருந்து ஒளிவருவதை அவதானித்தாள். அதனை விரைந்து எடுத்துப் பார்த்தாள். சஞ்சீவி மாத்திரை தெரிந்தது. இதனைச் சுவைத்துப் பார்த்தால் என்ன? யோசித்தாள். வாயில் போட்டுச் சுவைத்தாள். அப்படியே விழுங்கி விட்டாள். அவளுள் ஒரு மாற்றம் தெரிந்தது. தான் பாரமில்லாது இருப்பதை உணர்ந்தாள். அவளது உடல் காற்றில் பறக்கத் தொடங்கியது. ஹொயுய் அப்போதுதான் வந்தான். தனது மனைவி பறந்து போவதை அவதானித்தான். அவனும் பின்தொடர்ந்து வழி மறித்தான். வழியில் கடும் காற்றுத் தடுத்தது. ஆனால் அவனால் தடுத்து நிறுத்தமுடியாது போய்விட்டது. சேஞ்ஜி பறந்துவிட்டாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. அவள் நிலவுக்குச் சென்றுவிட்டாள். அங்கு போனபின்தான் வருந்தினாள். ஒருமுறை வாந்தி யெடுத்தாள். சஞ்சீவியின் ஒருபாதி விழுந்தது. தனது கணவனை நினைந்து வருந்தினாள்.அவளுக்குத் தனிமை வாட்டியது. ஆனாலும் ஜேட் மன்னனின் முயல் அங்கிருந்தது. அதனை அவள் கண்டு கொண்டாள். முயலின் உதவியை நாடினாள். இதேபோன்ற சஞ்சீவி மாத்திரையைத் தயாரிக்கும்படி முயலிடம் வேண்டினாள். முயல் மூலிகைகளைத் தேடிச் சஞ்சீவி மாத்திரையைத் தயாரிக்கும் வேலையில் தொடர்ந்து செய்கிறது.
இன்னும் அது முடியவில்லை.ஹொயுய் தனது மனைவியின் பிரிவால் வாடினான். சூரியனில் குடியேறினான். அங்கு ஒரு மாளிகையை அமைத்தான்.அங்கிருந்து பார்த்தால் சேஞ்ஜி தெரிவாள். சந்திரக் கலண்டரின் இலையுதிர் கால நடுப்பகுதி முக்கியமான நாளாகும். அன்றுதான் சந்திரனில் உள்ள தனது மனைவியைச் சந்திக்க ஹொயுய் செல்வார். ஹொயுய் வருகையால் சந்திரன் பிரகாசமாக இருக்கும். சீனர்கள் ‘சந்திரக்கேக்’ விழாவினைக் கொண்டாடுவார்கள். கடவுளரின் முடிவுகாலம்.முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் பெரியபோர் மூண்டது. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கடும் குளிர் நீடித்தது. கடவுளரின் இருப்பைத் தீர்மானிக்கும் யுத்தமாக இருந்தது. அதனால் போர் இறுதிக்கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. இப்போர் பழைய யுகத்தின் முடிவாகவும், புதிய யுகத்தின் தொடக்கமாகவும் இருந்தது.
ஒதின் இப்போரைத் தடுக்க முயற்சித்தார். ஏற்கனவே நடந்த யுத்தத்தில் இறந்த தேவர்களை சிரஞ்சீவிகளாக்கி, உயிர்ப்பித்து தேவர்களின் பலத்தை மங்காதிருக்கப் பாடுபட்டார். தேவர்களது வெற்றிக்காகக் காத்திருந்தார்.
அசுரர்களுக்கு நெருப்புக் கடவுள் லோகி தலைமை தாங்கினார். நரகத்தில் உள்ளவர்களை எழுப்பி யுத்தத்தில் ஈடுபடுத்தினார். அத்துடன் உலகத்தின் பலபாகங்களிலும் இருந்த அசுரர்களையும், பூதங்களையும் அழைத்திருந்தார். தேவர்களா, அசுரர்களா? என்பதைப் பார்த்து விடுவோம் என்று செயற்பட்டார்.
நயவஞ்சக ஓநாய்கள் சூரியனையும், சந்திரனையும் பிடித்து விழுங்கிவிட்டன. நட்சத்திரங்கள் காணாமல் போய்விட்டன. உலகம் முழு இருளில் மூழ்கிவிட்டது.
உலகமரத்தின் அடிவேர்களைக் கடித்துக் குதறப் பாம்பு எண்ணியது. கடல் அலைகளில் இருந்து வந்த பாம்பு விஷத்தை உலகில் படரவிட்டது. பயங்கரமான வெள்ளம் உலகத்தை ஆட்டிப்படைத்தது. வெள்ளம் உலகத்தை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. அவ்வேளையில் லோகி பூதங்கள் புடைசூழப் பெரும்படையோடு கப்பல்களில் வந்திறங்கினான். அக்கப்பல்கள் இறந்த மனிதர்களின் வெட்டப்படாத நகங்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது.
யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதை ஓதின் உணர்ந்தார். சண்டை நடந்து கொண்டிருக்கும் போது ஓநாய்ப்பூதத்தின் பிடியில் சிக்குண்டார். ஓதினை அது வளைத்துப் பிடித்து விழுங்கி விட்டது. ஒருவர்பின் ஒருவராக எல்லாத் தேவர்களும் தேவதைகளும் கொல்லப் பட்டார்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்தில் மனிதர்களும் கொல்லப்பட்டார்கள்.
ஓதினின் மகன் தோர் தந்தையைக் கொன்ற ஓநாய்ப்பூதத்தைப் பழிவாங்கினான். எனினும் பாம்பின் விஷத்தினால் அவனும் சகல உயிரினங்களும் அழிவுக்குள்ளாகின.
தித்திக்காகா ஏரியில்
தித்திக்காகா ஏரி கடல்மட்டத்தில் இருந்து 3850 மீற்றர் உயரத்தில் உள்ளது. 8000 வருடங்களுக்கு முன் எட்னா எரிமலை வெடித்து எரிமலைக் குழம்பினைக் கக்கியது. நூற்றுக்கணக்கான தொன்னளவு சாம்பலைப் பரப்பியது. பலமாதங்களாக அப்பிரதேசம் இருளில் மூழ்கியிருந்தது. பெருவெள்ளமும் அழிவும் ஏற்பட்டது. எரிமலை கக்கிய சாம்பல் கடல்மட்டத்தில் இருந்து 3000 மீற்றர் உயரத்துக்குப் பரவியது.
இன்கா நாகரிகம் இங்குதான் பிரபலமாக இருந்தது. இன்கா நாகரீகத்தின் கர்ணபரம்பரைக் கதைகள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தித்திக்காகா ஏரியில்தான் பிறந்தன எனக் கூறுகின்றன.
இன்கா புராணக் கடவுளான விரக்கோச்சா பூமியைப் பார்த்தார். எங்கும் வெறுமையே தெரிந்தது. பெரு வெள்ளம் அழிவை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டது. தித்திக்காகா ஏரியைப் பார்த்தார்.
“நீ சூரியனையும், சந்திரனையும் நட்சத்திரங்களையும் உருவாக்கு” என்று கட்டளையிட்டார். அவ்வாறே தித்திக்காகா ஏரியில் சூரியனும், சந்திரனும் நட்சத்திரங்களும் பிறந்தன. சந்திரத் தேவதை இசெல்
இசெல் என்ற பழங்காலச் சந்திரத் தேவதையை மாயா இனத்தவர்கள் வணங்கினார்கள். இசெல் அழகே வடிவமானவள். அவளை மாயன் வம்சத்தின் குலதேவதையாகப் போற்றினார்கள். அவளே மாயன் இனத்தின் தாயாக விளங்கினாள். மாயன் இனத்தவரின் வாழ்வுக்கும் சாவுக்கும் அவளே பொறுப்பாக இருந்தாள்.
ஒரு காலத்தில் இசல் சூரியனைக் காதலித்தாள். ஆனால் அவளது தாத்தா அவளை மின்னல் தாக்கத்தின் மூலம் கொன்றுவிட்டார். அவளை நினைந்து பெரியதும்பி கவலையில் ஆழ்ந்தது. அது பதின்மூன்று நாட்களாகக் கவலையில் மூழ்கி துன்பகீதம் இசைத்தது. அந்த அற்புத இசை இசெலை உயிர்ப்புறச் செய்தது. அவள் சூரியனிடம் சென்றாள். சந்தோசமான வாழ்க்கை நடந்தது.
அவர்களுக்கு முதலில் நான்கு குழந்தைகள் பிறந்தார்கள். அவர்கள் எவரின் கண்களிலும் படமாட்டார்கள். ஆனால் இரவில் இருளில் புகுந்து திசைகளுக்கு காவலாக இருப்பார்கள். பின்னர் நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள்தான் திசைக் காவலர்களான அட்ட திக்குப்பாலகர்கள்.
இசெல் அடிக்கடி காலை நட்சத்திரத்துடன் பழகுவதாகச் சூரியன் குற்றஞ்சாட்டினார். இடையிடையே வாக்கு வாதங்கள் தோன்றின. வாக்குவாதம் முற்றியது. சூரியன் இசெலைப் பார்த்து “நீ தூய்மையானவள் இல்லை. காலை நட்சத்திரத்தோடு நீ தொடர்பு வைத்துள்ளாய்.” என்று அவளைக் குற்றம் சாட்டினார். “என்னிடம் வராதே” என அவளை விரட்டிவிட்டார். இசெல் வருந்தினாள். அவளுக்குக் கவலை. பொங்கியது. இசெல் சென்றுவிட்டாள்.
ஆனால் இசெல் இல்லாமல் சூரியனுக்கு வாழ்வு கசந்தது. “நீ இல்லாத வாழ்வு நிலவில்லாத உலகு. நீ என்னிடம் வந்து விடு” என்றழைத்தார். இசெல்லின் மனம் மாறியது. இசெலும் வந்தாள். நாட்கள் நகர்ந்தன. இசெல் அழகாகப் பிரகாசித்தாள். சந்தோசமாக இருந்தாள்.
காலை நட்சத்திரம் இசெலோடு சில காலங்களில் தோன்றும். அப்போது கதைத்துக் கொள்வார்கள்.
சூரியனுக்குச் சந்தேகம் வந்தது. பொறாமையும் கூடவே வளர்ந்தது. காலை நட்சத்திரத்தோடு அடிக்கடி சல்லாபிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். ஒரு நாள் கோபத்தோடு அவளது பிரகாசத்தைப் பறித்துவிட்டார். இசெல் பிரகாசத்தை இழந்து வாடினாள்.
இசெல் சூரியனை விட்டு விலகினாள். சூரியன் வரும்போது இசெல் வருவதில்லை. அவள் தனது விருப்பப்படி வானில் உலா வருகிறாள். இசெல் என்ற சந்திரத் தேவதை உலகினுக்கு மழையை அனுப்புபவள். அவள்தான் வானவில் பெண். என்பார்கள். பெண்கள் தன்காலில் நிற்பதற்கு இசெலைப் பின்பற்ற வேண்டும். இசெலை ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டி என மாயன் இனப் பெண்கள் கருதுவார்கள். மாயன் இனத்தவர்கள் சந்திரத் தேவதையை வணங்கி வழிபட்டுக் கொண்டாடுவார்கள்.
ஹவாய் தீவின் ஹினா தேவதை
உலகின் ஹவாய் தீவுக்கூட்டங்களை "சுiபெ ழக குசைந" தீ வளையம் அல்லது அக்கனி வலயம் என்று அழைப்பார்கள். தீவுகள் மோதிர வடிவில் உள்ள. அதனால் "சுiபெ ழக குசைந" தீ வளையம் என்பார்கள்.
ஹவாய் தீவுக்கூட்டங்களில் ஆறு தீவுகள் பெரியன. இவை எரிமலை வலையத்தினுள் உள்ளன. இத்தீவுகள் அழகானவை.
ஹினா தேவலோகத்தின் தேவதை. ஒருநாள் பூவுலகத்துக்கு வந்தாள். ஹவாய்த்தீவுகளைக் கண்டாள். ஹினாவுக்குக் ஹவாய்த்தீவுகள் மீது கொள்ளை ஆசை ஏற்பட்டுவிட்டது. அத்தீவுகளைச் சுற்றி வந்தாள். இயற்கை அழகில் சொக்கி நின்றாள். அங்கேயே வாழத்திட்டமிட்டாள். ஒரு மனிதனைத் திருமணம் செய்தால்தான் பூவுலகில் வாழலாம். ஒரு கணவனைத் தேடிக் கொண்டு வாழ்ந்தாள். எனக் ஹாவாய் கதைகள் கூறுகின்றன.
தனது கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். அவள் ஏராளமான பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். சந்தோசமான வாழ்க்கை மெல்ல மெல்லக் கசந்தது. ஹினாவின் கணவன் அவளைக் கொடுமைப் படுத்தத் தொடங்கினான். அவளை அடித்துத் துன்புறுத்தினான். பிள்ளைகளிடம் இருந்து உதவிகள் கிடைக்கவில்லை. அவர்கள் பாராமுகமாக இருந்தார்கள். ஹினா தனிமைப் படுத்தப்பட்டாள். தனது வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை அவளே சம்பாதிக்க வேண்டியிருந்தது. அழகான அலங்கரிக்கப் பட்ட ஆடைகளை நெய்தாள்.
இப்படி இருந்து வாழ்வதால் பயனொன்றும் இல்லை என்பதை உணர்ந்தாள். அங்கிருந்து விட்டு விடுதலையாகிப் போகப் புறப்பட்டாள். பூமியில் இருந்தவாறே வானில் வானவில்லைப் படரவிட்டு அதில் நடக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தாள்.
ஒருநாள் வானவில்லைப் பரத்தி அதில் நடந்து சொர்க்கத்தை அடைய முயற்சித்தாள். வானவில்லைப் பரத்தினாள். அதில் ஏறிப் புறப்பட்டாள். அவள் புறப்படும்போது ஒன்றையும் கையில் எடுக்கவில்லை. பசியும் தாகமும் வாட்டியது. கடுமை யான வெப்பமாகவும் இருந்தது. பாதி யிலேயே வீட்டுக்குத் திரும்பி விட்டாள்.
ஹினாவை உபசரிப்பதற்கு யாருமே இல்லை. அவள் மனம் வருந்தினாள். ஒருநாள் இரவு உணவைத் தயாரிக்கவில்லை. அவளது பிள்ளைகள் அவளைத் தூற்றினார்கள். அவளது கணவன் முரட்டுத் தனமாகத் தாக்கினான்.அவளுக்கு மயக்கம் வந்தது. அறையினுள் மயங்கிக் கிடந்தாள். மயக்கம் தெளிந்ததும் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டாள்.
பொழுது விடியுமுன் புறப்பட்டாள். எப்படியோ அவளது கணவன் மோப்பம் பிடித்து விட்டான். பின்னால் துரத்தினான். ஹினா தனது வானவில்லைப் பரத்தினாள். அதில் ஏறினாள். நடக்கத் தொடங்கினாள். ஹினாவுக்கு இயலாமல் இருந்தது. இதனைக் கடவுள் பார்த்தார். ஹினாவுக்கு உதவ முன்வந்தார்.
அதே நேரம் கடவுள் ஹினாவின் பக்கத்தில் சந்திரனைத் தள்ளி விட்டார். ஹினாவுக்கு உதவி கிடைக்கின்றதை உணர்ந்தாள். கணவன் தன்னைப் பிடிக்க மாட்டான் என்று எண்ணினாள். ஆனால் அவளது பிடி தளர்ந்தது. கால் இடறியது. அவளது கணவன் ஓடிவந்தான். அவளது கால்களைப் பற்றி இழுத்தான். வானவில்லில் இருந்து புரண்டாள். அவளது கணவன் அவளின் கால்கபை; பிடித்துக் கொண்டான். இழுபறி நடந்தது. ஹினாவுக்கு வேறு வழி தெரியவில்லை. காலை ஒருவாறு மடக்கி அவனது முகத்தில் ஒரு உதைவிட்டாள்.
அவளது கணவன் கீழே விழுந்து சுருண்டான். இப்போது சந்திரனில் அழகிய ஆடைகளை நெய்து கொண்டு இருக்கிறாள். பூவுலக வாழ்க்கையை மறந்து விட்டாள். ஹவாய்த் தீவுகளில் மழை பெய்யும். அப்போது ஹினா மக்களுக்கு சந்தோசத்தைக் கொடுப்பதாக நினைப்பார்கள். ஹவாய் தீவுகளை இடிமின்னல் புயல் தாக்கும். அப்போது ஹினா தனது கணவனின் பிடியில் இருந்து தப்புவதற்கு எடுத்த செயலாகக் கொள்வார்கள்.
மாலை வெள்ளியும் சந்திரனும்
றொடிஸியாவில் வகறங்கா என்பது மாலை வெள்ளியைக் குறிக்கும். மாலை வெள்ளி ஒரு பெண்தெய்வமாகும்.
சந்திரன் பொலிவோடு சுற்றும் அழகான மணவாளன். வகறங்கா சந்திரனைக் கண்டாள். சந்திரனைக் கண்டதும் காதலிக்கத் தொடங்கினாள். மணந்தால் சந்திரனையே மணப்பேன் என்றாள். பெரியோர்கள் சம்மதம் பெறப்பட்டது. இருவரும் திருமணமாகி சந்தோசமாக வாழ்ந்தனர். அவர்களுக்கு ஆடு, மாடு, ஏனைய வீட்டு விலங்குகளும் பிறந்தன. இரண்டாவதாக பறவைகளும். ஏனைய விலங்குகளும் பிறந்தன. மூன்றாவதாக மனிதக் குழந்தைகள் பிறந்தன.
இனிமேலும் நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கக் கூடாது என்ற கட்டளையை தேவன் கொடுத்தார். ஆனால் சந்திரன் கேட்கவில்லை. தனது மனைவியை விட்டு விலகி இருப்பதா? அவளை நாடினார். அவர்களுக்கு நான்காவதாக பயங்கரமான விலங்குகள் பிறந்தன.
சந்திரனுக்குப் பயமுண்டாகியது. மாலைவெள்ளியை விட்டுப் பிரிந்திருந்தார். தன்னை ஓரங்கட்டி விட்டதாக மாலைவெள்ளி நினைத்தது. சந்திரனைப் பழிவாங்கத் தீர்மானித்தது. ஒரு பாம்பைப் பிடித்துச் சந்திரனைத் தீண்டுமாறு ஏவியது. பாம்பு சென்று சந்திரனைத் தீண்டியது.
சந்திரன் நோய்வாய்ப்பட்டார். நாடும் வாடியது. வரட்சி நிலவியது. விளைச்சல் குறைந்தது. மக்கள் சந்திரனில்தான் பிழை என்று கருதினார்கள். ஒன்றாகச் சேர்ந்து சந்திரனைப் பிடித்துக் கட்டினார்கள். இழுத்துக் கொண்டு போனார்கள். அப்படியே கடலில் தூக்கி எறிந்து
விட்டார்கள். அதன்பின் சந்திரன் கடலில் இருந்தே மாலையில் வெளிவருகிறது. இன்றுவரை மாலைவெள்ளியை வானத்தில் தேடித்திரிகிறது.
சந்திரனும் சூரியனும்
சூரியனும் சந்திரனும் கணவனும் மனைவியுமாவர். அவர்களுக்கு ஏராளமான பிள்ளைகள். நடசத்திரங்கள்தான் அவர்களது பிள்ளைகள். இருவர் பக்கமும் பிள்ளைகள் இருந்தனர். சந்திரனின் பக்கத்தில் உள்ள பிள்ளைகளை ஒழிக்க வேண்டும் என்று சூரியன் தீர்மானித்தது. ஒருநாள் சந்திரனோடு உரையாடியது. “அன்பானவளே! நமது இருவர் பக்கமும் நமது குழந்தைகள் உள்ளனர்தான். ஒரே பிள்ளைகளை எத்தனை தடவைகள் பார்ப்பது.? ஒரு மாற்றம் வேண்டுமல்லவா? எனகச்கு அலுப்புத் தட்டிவிட்டது. நாங்கள் இருவரும் பிள்ளைகளை மாற்றிக் கொள்வோம்”;. என்றது.
“நீங்கள் சொல்வது சரிதான். எனக்கும் பிள்ளைகளைப் பார்க்க ஆசைதான். சந்திரனும் ஒத்துக் கொண்டது. “ஆனால் ஒரு ஒப்பந்தம்” என்றது. “என்ன ஒப்பந்தம்?” சூரியன் கேட்டது. “ஒவ்வொரு நாளும் உங்கள் பக்கமுள்ள ஒரு பிள்ளையை முதலில் அனுப்புங்கள். நான் பதிலுக்கு எனது பக்கமுள்ள ஒரு பிள்ளையை அனுப்புகிறேன்”. என்றது.
“இது மிகவும் நல்ல புத்திசாலித்தனமான முடிவு”. சூரியன் ஏற்றுக் கொண்டது. அடுத்த நாள் சூரியன் தனது முதலாவது பிள்ளையை அனுப்பியது. பிள்ளையைக் கண்டதும் தாய்க்குச் சந்தோசம். சந்திரன் அந்தப் பிள்ளையை வரவேற்றுக் குளிப்பாட்டியது. நல்ல உடைகளை அணிவித்து அழகு பார்த்தது.
பதிலுக்குத் தனது முதற்பிள்ளையை சூரியனிடம் அனுப்பியது. சூரியன் அப்பிள்ளையை உண்டு ஏப்பம் விட்டது. இவ்வாறு வரும் பிள்ளைகளைச் சூரியன் விழுங்கிவிட்டது. சந்திரன் பாதுகாப்பாகத் தன்னிடம் வரும் பிள்ளைகளை வைத்திருந்தது. இது
தொடர்ந்தது. இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தது. பிள்ளைகள் வெருண்டு ஒளிந்தார்கள். சூரியனைக் கண்டு வெகுதூரம் ஓடினார்கள்.
இதனால் சூரியன் காலையில் வெளிவரும்போது வானம் வெறுமையாக இருக்கும். ஆனால் சந்திரன் இரவில் வரும்போது பிள்ளைகள் புடைசூழ பவனி வரும். பிள்ளைகளுக்குக் கொண்டாட்டமாக இருக்கும்.
சூரியனும் சந்திரனும்
சூரியன் சந்திரப் பெண்ணின் அழகில் மயங்கினார். அவள்மேல் காதல் கொண்டார். பல தூதுகளை அனுப்பினார். சந்திரப் பெண் மசியவில்லை. சூரியனும் விடாது தொடர்ந்து தூதுகளை அனுப்பிக் கொண்டிருந்தார். “நீ இல்லாமல் நான் இல்லை. என்னைத் திருமணம் செய்துகொள்” என்றார். சந்திரப் பெண்ணுக்குப் பெருந் தொல்லையாகிவிட்டது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தாள். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாள்.
“எனது உடலின் அளவுக்கேற்ற நல்லதொரு நினைவுப் பரிசொன்றைத் தாருங்கள். நான் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று சந்திரன் செய்தி அனுப்பியது. சூரியனுக்குப் பெரிய சந்தோசம். அவர் அழகான ஆடையைத் தயாரித்தார். எடுத்துச் சென்று கொடுத்தார். ஆனால் அது அளவில்லாதிருந்தது. இப்படிப் பலநாட்கள் சென்றன. சூரியன் எடுத்துச் செல்லும் ஆடைகள் அத்தனையும் அளவானதாக இல்லை. சந்திரன் சிலகாலங்களில் உடல் வளர்ந்து ஜொலிக்கும். சூரியன் கொண்டு வரும் சட்டை அளவில்லாது இருக்கும். சந்திரன் தேய்பிறையாக இருக்கும் காலத்தில் சட்டைகள் பெரிதாக இருக்கும். ஒன்றில் சிறிதாக இருக்கும். அல்லது பெரிதாக இருக்கும்.
சந்திரனின் தந்திரத்தைச் சூரியன் புரியவில்லை. இன்னும் சூரியன் ஆடைகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. அவை சந்திரப் பெண்ணுக்கு அளவில்லாது இருக்கிறது. ஏனேன்றால் சந்திரன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவில் வளர்ந்தும், தேய்ந்தும் இருக்கிறது.
பூமறாங் பிறைச் சந்திரன் .
அவுஸ்திரேலியாவில் ஆதிவாசிகள் வாழுகின்றனர். அவர்களை அபரோஜீனிஸ் எனவும் கூறுவர். அவர்களிடம் பூமறாங் என்னும் எறிதடி இருக்கும். அது வளைந்திருக்கும் தடி. அதனால் அந்த ஆதிவாசிகள் வேட்டையாடுவார்கள். பூமறாங் எறிந்தால், குறிவைத்த பொருளைத் தாக்கிவிட்டு மீண்டும் எறிந்தவரிடமே வரும்.
முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் இரவினில் வேட்டையாடுவதில் சிரமத்தை எதிரநோக்கினார்கள். பூமறாங் குறியைத் தாக்கிவிட்டு மீண்டும் வருவதைக் கண்களால் பார்க்க முடியாதிருந்தது. அதனால் பூமறாங் ஆயுதத்தில்

வெளிச்சத்தை ஏற்படுத்த முனைந்தார்கள். பெரியதொரு பூமறாங்கைச் செய்து அதனை மேலெறிந்தால் அந்த வெளிச்சத்தில் பூமறாங்கைக் காணலாம் அல்லவா? பெரியதொரு பூமறாங்கைச் செய்து பார்த்தார்கள். அதனை மேலே எப்படி எறிவது? அனைவரும் முனைந்தார்கள். அது மேலே செல்லவில்லை.
ஈற்றில் ஒரு மெலிவானவர் முன்னால் வந்தார். தான் எறிந்து பார்க்கச் சந்தர்ப்பம் தரும்படி கேட்டார். அவரை மக்கள் ஏற இறங்கப் பார்த்தார்கள். சிலர் “யாரிந்த நெத்தலிப் பயில்வான்” என்றார்கள். சிரித்துக் கொண்டார்கள். “சரி கொடுத்துப் பார்ப்போம்” என்றார்கள். சத்தமிட்டவாறு கொடுத்தார்கள். அவர் மக்களை விலக்கிவிட்டு முன் வந்தார். தனது எலும்புக் கையால் பூமறாங்கை எடுத்து மேலே எறிந்தார்.
என்ன அதிசயம்? பூமறாங் வானில் மேலே மேலே சென்றது. திரும்பவே இல்லை. பொழுது போய் இருள் மெல்லப் படர்ந்தது. “அங்கே பாருங்கள். பூமறாங். வானில் தெரிகிறது”. சிறுவர்கள் சத்தமிட்டார்கள்.
பெரியவர்கள் அண்ணார்ந்து வானைப் பார்த்தார்கள். அவர்களது பூமறாங் இன்றும் வானில் தெரிகிறது.
சோமா என்ற சந்திரன்.
இந்துப் பண்பாட்டில் பல கதைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று சந்திரனைப் பற்றியது. இங்கு சந்திரன் சோமா என்ற பெயரோடு வானில் உலா வருகிறார். அவர் வெண்குதிரைகள் பூட்டிய தேரில் வானில் இரவினிலே பவனி வருவார்.
சோமாவின் பொறுப்பில் தேவர்கள் அருந்தும் சோமபானம் இருக்கும். அப்பானத்துக்குச் சோமாவே பொறுப்பு. அவரிடமே சோமபானக் களஞ்சியம் இருக்கிறது. தேவர்கள் சோமபானத்தை அருந்த வருவார்கள். அந்த நாட்களில் சந்திரனாகிய சோமா ஒளியினைப் படிப்படியாக இழந்து விடுவார். தேவர்கள் அனைவரும் சோமபானத்தைக் குடித்து முடித்து விடுவார்கள். களஞ்சியம் வெறுமையாக இருக்கும் அன்று சோமா வெளியில் தெரியமாட்டார். ஒளியாவற்றையும் இழந்து நிற்பார். அன்று அமவாசையாகும். படிப்படியாக சோமபானம் ஊறத்தொடங்கும். சோமா படிப்படியாக வளர்ந்து முழுமதியாக நிறைந்து நிற்பார்.
சந்திரனும் நட்சத்திரங்களும்
பிலிப்பின்ஸ் தீவுகள் பல உண்டு. அத்தீவுகளில் எரிமலைத் தாக்கங்களும் உள்ளன.
பிலிப்பின்ஸ் தீவொன்றில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அக்குடும்பத்தில் சிரோமி என்றொரு சிறுமி இருந்தாள். அவள் தனது தாய்க்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுப்பாள். தானியங்களை உரலில் போட்டு உலக்கையால் கைகளை மாற்றி மாற்றிக் குத்திச் சுத்தப் படுத்துவாள். அக்காலத்தில் வானம் கீழிறங்கி வந்து பூமியில் வேடிக்கை பார்க்கும்.
அவள் தன்னை அலங்கரிப்பதில் கெட்டிக்காரி. தனது தலையை வாரி அழகாக வைத்திருப் பாள். கழுத்தில் அழகான கழுத்து மாலையை அணிந் திருப்பாள். அவள் அம்மாவுக்கு உதவி செய்யும்போது அணிகளைக் கழற்றிப் பக்கத்தில் உள்ள உயரமான மேடையில் வைத்திருப்பாள். அக்காலத்தில் வானம் கீழிறங்கி வருவது வழக்கம். கீழே வந்து வந்து மேலே உயர்ந்து போகும். அன்றும் அப்படித் தான் நடந்தது.
சிரோமி உரலில் தானியங்களைப் போட்டாள். தான் அணிந்திருந்தமாலை யையும், ஏனைய அணிகளையும் கழற்றி உயரத்தில் வைத்தாள். வானம் கீழிறங்கி வந்தது. உலக்கையை ஓங்கிக் குற்றினாள். உலக்கை வானத்தில் பட்டது. வானம் மேலுயர்ந்து போனது. திரும்பி வரவே இல்லை. சிரோமியின் அணிகலங்கள்; வானத்தில் பிரகாசிப்பதைப் பார்த்தார்கள். அவை இன்றும் ஒளி வீசிப்பிரகாசிக்கின்றன.
சந்திரக் கழுத்தணி
முன்னொரு காலத்தில் ஒரு ராணி இருந்தாள். அவளுக்கு அவளது தாயார் ஒரு கழுத்து மாலையைப் பரிசாகக் கொடுத்தார். ராணி பகலில் அந்தக் கழுத்தணியை அணிவாள். இரவில் படுக்கைக்குப் போகும்போது அணிகளைக் கழட்டி வைத்துவிட்டுச் செல்வாள். விடிந்ததும் தனது கடமைகளை முடித்ததும் அணிகளை அணிந்து கொள்வாள்.
அன்று அழகான காலைப் பொழுது. ராணி குளித்து விட்டு வந்தாள். ராணி உடையணிவதில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள். உடைகளை அணிந்து கொண்டதும் கழுத் தணியைப் பார்த்தாள். அவள் வைத்த இடத்தில் அதனைக் காணவில்லை. அரண்மனை எங்கும் தேடினார்கள். ஆனால் அதனைக்காணவில்லை.
அதனை 32ம் பால்வீதி அரசன் திருடி வைத்துக் கொண்டான். தனது படையணித் தளபதிகளை அழைத்தாள். “அந்தக் கழுத்தணியை எனது தாயார் ஆசையோடு எனக்குத் தந்தவர். அதனை எப்படியாவது பெற்றுத் தாருங்கள்”. தனது படைத்தளபதிகளுக்குக் கட்டளையிட்டாள்.
படையணியினர் பால்வீதி மன்னனோடு போரிட்டார்கள். கடும் மோதல் ஏற்பட்டது. இறுதியில் மன்னனிடம் இருந்து அக்கழுத்தணியைப் பெற்றார்கள். ராணியிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் அதை அவள் அணியவில்லை. அதனைத் தனது படைத்தளபதிகளிடம் பத்திரமாகப் பாதுகாக்கும்படி கொடுத்தாள். அதனை இன்றும் படையணியினர் பாதுகாக்கின்றார்கள். அதனை முதலாம் பிறையன்று வானில் இன்றும் பார்க்கலாம்.
கொயட்டும் கழுகும்
மிகப்பழங்காலத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ இருக்கவில்லை. எங்கும் ஒரே இருளாகவே இருந்தது. கொயட் என்ற வேட்டைக்காரன் இருந்தான். அவன் சரியான சோம்பேறி. எப்போதாவது வேட்டைக்குப் போவான்.
அவன் ஒருநாள் ஒரு கழுகைச் சந்தித்தான். “ஒருவரைவிட இருவர் சேர்ந்தால் அதிகம் வேட்டையடலாம்” என்று கூறிக்கொண்டான். “இருளில் வேட்டையாட முடியாதுள்ளது. ஏதேனும் வெளிச்சம் வேண்டும். வெளிச்சம் இருந்தால் எவ்வளவு நல்லது. நாம் இருவரும் சேர்ந்து வேட்டையாடலாம்”. என்று பேசிக் கொண்டார்கள். அதனைத் தேடிப் பெறவேண்டும் என்று தீர்மானித்தார்கள். என்ன செய்யலாம்.? யோசித்தார்கள். இருவரும் எங்காவது போய்த் தேடலாம் என்று புறப்பட்டார்கள்.
தூரத்தில் செவ்விந்திய இனத்தவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் முகமூடி அணிந்து நடனமாடுவார்கள். அவர்களைக் கசினாஸ் என்றழைப்பார்கள். கசினாஸ் என்றால் ‘முகமூடி ஆட்டம்’; என்று பொருள். கசினாஸ் வாழும் பகுதிக்குச் சென்றார்கள். கசினாஸ் இரண்டு பெட்டிகள் வைத்திருந்தார்கள். ஒன்றினுள் சூரியன் இருந்தது. மற்றதில் சந்திரனை வைத்திருந்தார்கள். அவை அவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்தன. அவர்கள் அவற்றைப் பயன்படுத்தித் தங்களது வாழ்க்கையைச் சந்தோசமாகக் கழித்தார்கள். “இந்தப் பெட்டிகளைக் கவர்ந்து சென்றால் நமக்கு வேட்டையாட வசதியாக இருக்கும். நாம் இதனைக் கவர்ந்து செல்வோம்.” இருவரும் கவர்ந்து செல்லத் திட்டமிட்டார்கள்.
சந்தர்ப்பத்தைப் பார்த்தி ருந்தார்கள். கசினாஸ் இனத்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். மெதுவாக கொயட் முன்னால் நடந்தான். கழுகு பின்னால் நடந்தது. இருவரும் பெட்டிகள் பக்கம் வந்தார்கள். இரண்டு பெட்டிகளையும் பெரிய தொரு பெட்டியினுள் வைத்தார்கள். கழுகு அப்படியே அலக்காகப் பெரிய பெட்டியைத் தூக்கியது. விரைந்து பறந்தது. பின்னால் கொயட் ஓடினான். கழுகு விரைந்து பறந்து வெகுதூரத்துக்கு வந்துவிட்டது. சற்று ஓய்வெடுக்க நினைத்தது. பெட்டியைக் கீழே வைத்தது. கொயட்டைப் பார்த்தது. அவன் இன்னும் வந்து சேரவில்லை. கழுகுக்கு ஆர்வம் மிகுந்தது. கொயட் வருமுன் இவற்றைப் பார்க்கும் ஆவலில் பெட்டியைத் திறந்தது.
பெட்டிகள் திறபட்டதும் இரண்டு வெளிச்சப் பந்தங்களும் துள்ளியெழுந்து புரண்டு பறந்தன. சூரியன் ஆகாயத்தை நோக்கி வெகுதூரத்துக்குப் போனது. அங்கேயே நிலைத்து விட்டது. சந்திரன் எங்கே போவதென்று தெரியாமல் தவித்தது. அது பூமியைச் சுற்றிப் பறந்தது. சந்திரன் இன்றும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.
மலினாவும் அனிங்கனும்.
கிறீன்லாந்து மக்களை இனுக் இன மக்கள் என்று அழைப்பார்கள். அந்த மக்களின் கடவுளராக சூரியனும். சந்திரனும் விளங்குகிறார்கள். சூரியனை மலினா என்றும் சந்திரனை அனிங்கன் என்றும் அழைப்பார்கள். மலினா என்ற சூரியன் பௌ;. அனிங்கன் என்ற சந்திரன் ஆண். இருவரும் சகோதரர்கள். கிறீன்லாந்து மக்களின் கூற்றாக இக்கதை வழங்குகிறது.
மலினா தனது தம்பியுடன் விளையாடுவாள். இருவரும் சிறுவயதி லிருந்தே ஒன்றாக விளையாடுவது வழக்கம். இருளிலும் விளையாடு வார்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர் களது மனங்கள் மாறி விட்டன. மலினா அழகானவள். அவளது அழகை அனைவரும் புகழ்ந்தார்கள். மலினா அனிங்கனை விடவும் அழகானவள். நல்ல ஒளியினை உடையவள் என்று ஊரார் புகழ்ந்தனர்.
இப்புகழ்ச்சி அனிங்கனுக்குப் பொறாமையை வளர்த்தது. ஆளுக்காள் சண்டையிட்டனர். அனிங்கன் கோபம் கொண்டான். கிறீன்லாந்தில் சீல்மீன் கொழுப்பில்தான் விளக்குகளை எரிப்பார்கள். அது அதிக புகையைக் கொடுக்கும். எரிந்த கொழுப்பு கரியநிறத்தில் இருக்கும். அவர்களது சண்டையில் சீல்மீன் விளக்குக் கவிழ்ந்து வீழ்ந்தது. அதன் கரியபுகை கலந்த கொழுப்பு மலினாவின் கைகளில் படிந்துவிட்டது.
அந்தக் கைகளால் கரியபுகை கலந்த கொழுப்பை அனிங்கனின் முகத்தில் தேய்த்துப் பூசிவிட்டாள். அனிங்கனின் முகம் கறுத்து விட்டது. கோபம் கொண்ட அனிங்கன் மலினாவைத் துரத்தினான். இன்றும் வானில் துரத்திக் கொண்டே இருக்கிறான்.
அவுஸ்திரேலியாவில் இன்னுமொரு கதை
முற்காலத்தில் அவுஸ்திரேலியா இருளில் மூழ்கியிருந்தது. எங்கும் இருளாகவே இருந்தது. வெப்பமோ. வெளிச்சமோ இருக்கவில்லை. அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மிகக் கஸ்டப் பட்டார்கள். பழங்காலத்தில் தமது உணவுக்காக இருளில் அலைந்தனர். வெளிச்சமும் இல்லை. நெருப்புப் இல்லை. வேட்டையாடிக் கிடைத்த உணவினைப் பச்சையாகவே உண்டனர்.
அவுஸ்திரேலியரின் கதைப்படி உலகத்தின் முதல் மனிதரான புறுக்குப்பாளியும், அவரது நண்பர் ஜபறாவும் இரண்டு தடிகளை எடுத்தனர். அவற்றை ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துத் தேய்த்தனர். என்ன அதிசயம்? நெருப்பு வந்தது. புறுக்குப்பாளி தனது கண்டு பிடிப்பால் தீ உண்டானதைப் பறைசாற்றினார். அவருக்கு ஒரு தங்கை இருந்தாள். உறியுப்றனலா என்பது அவள் பெயர்.
ஒருநாள் புறுக்குப்பாளி மரப்பட்டைகளைச் சேர்த்தார். அவற்றை ஒழுங்காக இணைத்துக் கட்டினார். பெரியதொரு பந்தமாக்கினார். அப்படி இரண்டு பந்தங்களைச் செய்தார். தீயினை மூட்டி ஒன்றைத் தனது தங்கை உறியுப்றனலாவுக்குக் கொடுத்தார். மற்றதை நண்பர் ஜபறாவிடம் கொடுத்தார். இந்தப் பந்தங்களை அணையவிடாது பாதுகாக்கும் படி கூறினார். அவுஸ்திரேலியாவில் வெளிச்சம் உண்டானது. காலம் கரைபுரண்டோடியது. புதுயுகம் பிறந்தது. உறியுப்றனலா தீப்பந்தம் சூரியனாக மாற்றம் பெற்றது. சூரியன் பெண் கடவுளாகப் போற்றபெற்றாள். ஜபறா சந்திரனாக மாற்றம் பெற்றது. சந்திரன் ஆணாக மாற்றம் பெற்றார்.
ஒவ்வொரு நாளும் சூரியப்பெண் தனது தீப்பந்தத்தோடு கிழக்கில் உதிக்கும். அப்போது மக்கள் எழுந்து வெளிச்சத்தில் வேட்டையாடச் செல்வார்கள். மாலையில் மேற்கே மறைந்து விடும். அப்போது இருள் சூழும். சந்திரப் பெண் இரவில் சிறிய தீப்பந்தத்துடன் வானில் வந்து வெளிச்சத்தைக் கொடுக்கும்.
மௌரி இனத்தவர் கதைகள்
தங்கறோ என்ற சமுத்திரக் கடவுள் இருந்தார். அவருக்கு அழகான மகள் இருந்தாள். றோனா என்பது அவளது பெயர். றோனா கடலின் வற்றுப் பெருக்குக்குப் பொறுப்பாக இருந்தாள். அவள் தனது பிள்ளைகளுக்கு ஆற்றிலே தண்ணீர் எடுத்துச் செல்வது வழக்கம். ஒரு நாள் இரவு தண்ணீரை வாளியில் எடுத்துக் கொண்டு சென்றாள்.
சந்திரன் மேகத்திரையில் சட்டென மறைந்து கொண்டான். எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. இருளில் றோனா தண்ணீர் வாளியுடன் நடந்தாள். நிலத்தில் மரத்தின் வேர் துருத்திக் கொண்டிருந்தது. அவளுக்கு இருளில்
தெரியவில்லை. நிலத்தடியில் இருந்த வேர்க் கட்டை அவளது கால் விரலைத் தாக்கி விட்டது
அவளுக்கு வலித்தது. வலி பொறுக்க முடியவில்லை. சந்திரனைப் பார்த்துக் கோபத்தில் இரக்கமில்லாது ஏசினாள். அவளின் குரல் சந்திரன் காதுகளுக்கு எட்டியது. சந்திரனுக்குக் கோபம் வந்து விட்டது. றோனாவை அவளது தண்ணீர் வாளியுடன் பிடித்துச் சென்றார். அங்கேயே அவளை வைத்து விட்டார். இப்போதும் ஒரு பெண்ணைத் தண்ணீர் வாளியுடன் சந்திரனில் பார்க்கலாம்.
றோனா தண்ணீர் வாளியுடன் செல்வாள். அவள் தடுமாறி விழுந்தால் தண்ணீர் கொட்டும். அப்போது பூமியில் மழை பெய்யும். இப்போதும் பூமியின் வற்றுப் பெருக்குக்குப் பொறுப்பாக றோனா இருக்கிறாள்.
அமெரிக்க இந்தியர்களின் கதை
சூரியன் மறையும் எல்லையில் இரண்டு கிராமங்கள் இருந்தன. அங்குள்ள மக்கள் சந்திரனை தங்கள் கிராமத்தில் வைத்திருந்தார்கள். வேறு கிராமத்து மக்கள் வந்து சந்திரனைத் திருடி வானில் வைத்து விடுவார்கள் என்று பயந்தார்கள். அதனால் அவர்கள் சந்திரனைப் பத்திரப்படுத்திப் பாதுகாத்தார்கள். அதனைத் தடுப்பதற்காக காவலும் இருந்தார்கள்.
அதேவேளை இரண்டு கவரிமான்கள் சந்திரனைக் கவர்ந்து செல்லத் திட்டமிட்டன. அதற்காகக் காத்திருந்தன. ஒருநாள் கிராம மக்கள் அயர்ந்திருந்தனர். கவரி மான்கள் மெல்ல வந்தன. சந்திரனைக் கவர்ந்து கொண்டு விரைந்தன. கிராமமக்கள் துரத்தினார்கள். அவற்றோடு ஓடமுடியாது போயிற்று. பாதி வழியில் நின்றார்கள். கவரிமான்கள் விரைந்து வெகுதூரம் ஓடின. அதனால் களைத்து விட்டன. மேலும் ஓடமுடியாதிருந்தது. ஒரு கிராமத்தின் எல்லைக்கு வந்துவிட்டன. சற்று ஓய்வெடுக்க நினைத்து சந்திரனை மரத்தடியில் வைத்தன.
அதனை கொயட் கண்டான். கவரிமான்களுக்குத் தெரியாமல் சந்திரனை களவாட நினைத்தான். மெல்ல நடந்து சென்றான். சந்திரனைப் பற்றியெடுத்தான். எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினான். அவன் வெகுதூரம் சென்றபின்னரே மான்கள் கண்டன. அவையும் பின்னால் துரத்தத் தொடங்கின. அவை பின்னால்
வருவதை கொயட் கண்டுவிட்டான். அவனெதிரே ஒரு ஏரி தென்பட்டது. தனது பலமெல்லாம் திரட்டிச்
சந்திiனை ஏரிக்குள் வீசிவிட்டான். ஏரிக்குள் சந்திரன் போய் விழுங்தது. அந்த ஏரிக்குள் இன்றும் சந்திரன் கிடக்கிறது. இரவில் தண்ணீருக்குள் பாருங்கள் சந்திரன் தெரியும்.
இப்படியும் ஒரு மௌரிக் கதையுண்டு
முற்காலத்தில் றோனா என்றொரு இளைஞன் இருந்தான். அவனுக்கு ஒரு அழகான மனைவி இருந்தாள். இருவரும் சந்தோசமாக வாழ்ந்தார்கள். அடிக்கடி கோபித்துக் கொள்வார்கள். பின் கோபம் முடிந்து சந்தோசமாக வாழ்வார்கள்.
ஒருநாள் றோனா வெளியில் சென்றான். அவன் நேரம் கழித்தே வீடு வந்தான். வீட்டில் அவன் மனைவி இல்லை. அவளைத் தேடினான். அவள் வரவே இல்லை. எங்கும் தேடியும் அவளைக் காணவில்லை. தேடியலைந்து களைத்து விட்டான். அவள் சந்திரனில் இருப்பதைக் கண்டான். அவளிடம் சென்றான். அவனது முகம் மலர்ந்தது. மனைவியும் மகிழ்ந் திருந்தாள்.
அவர்களுக்கிடையில் பழையபடி வாக்குவாதம் தோன்றியது. ஆளுக்காள் சண்டைபிடித்துக் கொண்டார்கள். அச்சண்டையினால் நிம்மதி மெதுவாக மறையத் தொடங்கியது. சந்திரன் மெலியத் தொடங்கியது. ஒருநாள் சண்டை முற்றியது. அன்று சந்திரன் யார் கண்களுக்கும் தெரியவில்லை. மக்களுக்கு வேதனை பிறந்தது. இதற்கான காரணத்தை அறிய அலைந்தார்கள். கணவன் மனைவியுடன் சண்டையிடுவது வழமையானது. சண்டை முற்றிக் கொள்ளும் நாளில் சந்திரன் வெளியில் தெரிவதில்லை. இருவரும் சந்தோசமாக இருக்கும் நாளில் சந்திரன் பிரகாசமாக இருப்பதையும் கண்டு கொண்டார்கள். முற்றாக மறைந்து கொள்ளும் நாள் அமவாசையாகும். இருவரும் மகிழ்ந்திருக்கும் நாள் ஒளிமயமாகிப் பிரகாசிக்கும். அன்று பூரணையாகும். தன் உண்மையைப் புரிந்து கொண்டார்கள்.
சந்திரக் கடவுள்
நமது பூமிக்குச் சொந்தமான சந்திரனைப் பலநாடுகள் கடவுளாகப் போற்றி வணங்குகின்றன. தென்னாசிய நாடுகளிலும், இந்து சமயத்தின் இதிகாச புராணங்களில் சந்திரனுக்கு முக்கிய இடமுண்டு. பலநாடுகளின் இனங்கள் தாங்கள் சந்திரனின் நேரடி வாரிசுகள் எனக்கருதுகிறார்கள். பபிலோனிய, சுமேரிய நாகரீககாலங்களில் சந்திரனுக்குக் கோயில்கள் இருந்தன. கி.மு.2100ல் மொசப்பெத் தேமியாவின் ‘சிக்குறாற்’ கோவிலில் சந்திரக் கடவுளின் திருவிழாக் காட்சி படத்தில் காட்டப் பட்டுள்ளது.
ஊர்வலமாக சந்திரக்கடவுள் அவரது கோயிலான ’சொர்க்கத்தின் மலை’க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பிரித்தானிய அரும் பொருட் காட்சியகத்தில் உள்ள சந்திரக்கடவுளின் கோயிலின் வரைபடம் உள்ளது. அதனைப்படத்தில் காணலாம்.
‘சின்’ என அழைக்கப்பட்ட சந்திரக் கடவுள் மத்திய கிழக்கு நாடுகளில் போற்றப்பட்டுள்ளதை வரலாறுகள் கூறுகின்றன. ஏப்ரகாம் காலத்தில் சந்திரக்கடவுளின் வணக்கமுறை பரவி யிருந்தது. ரோமானியர்கள் சந்திரனை ‘தயானா’ என அழைத்து வணங்கினார்கள். வேட்டைக்குச் செல்லும்போது காவற்கடவுளாகவும். வேட்டைக்கு உதவும் பெண்கடவுளாகத் தயானா விளங்கியது. படத்தில் தயானா தனது வேட்டை நாயுடன் காணப்படுகிறார்.
தயானா இத்தாலியரின் வனதேவதையாகும். ஜூபிற்றர் என்ற சீயஸ் கடவுளுக்கும், லரோனாவுக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. மூத்தது ஆண். அதற்கு அப்பலோ என்று பெயர் சூட்டினார்கள். இளையது பெண்குழந்தை. அதற்குத் தயானா எனப்பெயர் சூட்டினார்கள். கிரேக்கர்களின் பெண்கடவுளான அர்த்தமீஸ் சந்திரக்கடவுளாகும். அர்த்தமீஸ்தான் ரோமர்களின் தயானா எனக் கொண்டனர். கிரேக்க புராணங்களில் அர்த்தமீஸ் அப்பலோவின் தங்கையாவார். அதேவேளை அர்த்தமீஸ் வேட்டைக்குரிய பெண்கடவுளுமாவார். தாயும் தந்தையும் சீயஸ_ம் லரோனாவும் ஆவார்கள். தயானாவுக்கு கப்புவா என்ற தேசத்தில் கோயில் உண்டு. அதேபோல் ஆபிரிக்காவிலும் கோயில்கள் உண்டு. சந்திர வணக்கம் இன்றும் உள்ளது.
ஆதியில் சந்திரன் பிரதான கடவுளாக விளங்கியது. சந்திரனை ‘சின்’ எனும் பெயரால் அழைத்தார்கள். சின் கடவுளின்
மனைவி ‘பெருந்தகைப் பெண்’ அவர் பெயர் திங்கள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தார்கள். ஒரு குழந்தை ‘சமாஸ்’; என்ற பெருடைய சூரியன். இரண்டாவது ‘இஸ்தர்’P என்ற பெயருடைய வீனஸ் கிரகம். மூன்றாவது ‘நுஸ்கு’ எனும் நெருப்புக் கடவுள். ‘ஊர்’ ‘ஹரான்’ ஆகிய இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன.
மொசப்த்தேமியாவில்
வானில் மிதந்துவரும் பெரிய தேவதையாகச் சந்திரனைப் பார்க்கிறோம். சில சந்தர்ப்பங்களில் சந்திரன் ஆண்தெய்வமாகவும் வர்ணிக்கப்படுகிறது. 5000 ஆயிரம் வருடங்களுக்கு முன் மொசப்பத்தேமிய தேசத்தில் ஊர் என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்குக் கோயில் இருந்தது. சந்திரனை சின் என்ற பெயரால் அழைத்தார்கள். சந்திரக் கடவுளான ஹ_பால் என்ற சொல்லில் இருந்தே ‘அல்லாஹ்’ என்ற சொல் பிறந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.( வுhந எநசல யெஅந ழக யுடடயாஇ அயல ளவநஅ கசழஅ வாந அழழn பழன ர்ரடியட.)
இவை பபிலோனிய சாம்ராச்சி யத்தில் இருந்தன. ஆப்பிரகாம் காலத்தில் சின் கடவுளின் வழிபாடு பெருமளவில் இருந்தது. சின்கடவுள் அறிவும் சூட்சுமப் புத்தியும் கொண்டவர் என நம்பினார்கள். அவரே நாட்காட்டியில் தலைவரும் ஆவார். சந்திரனை ‘நன்னா’ என்று பெருமையோடு அழைத்து வணங்குவார்கள். ஒவ்வொரு மாதமுடிவிலும் சந்திரக்கடவுள் காட்சி கொடுத்து அவர்களுக்காகத் தீர்மானம் எடுப்பார் என நம்பினார்கள். பபிலோனியாவின் இறுதி மன்னன் நபோனிடஸ் கி.பி.550 ல் சந்திரனுக்கான கோயிலைப் புதுப்பித்தான் என வரலாறு கூறுகிறது.
சந்திரன் இளமையும், அழகும் கொண்டவர். ஒரு கையில் சிறு ஆயுதமும், மறுகையில் தாமரைப்பூவையும் வைத்துள்ளார். அவரது தேர் அழகானது. அதில் பத்து அழகிய வெண்குதிரைகள் பூட்டியிருக்கும். இரவு வேளையில் வானவீதில் தேரில் செல்லுவார். மனிதர்களையும், விலங்குகளையும் பல்வேறு உயிரினங்களையும் பாதுகாக்கவே அவர் அவ்வாறு செல்வதாகக் கதைகள் கூறுகின்றன. சிறப்பாக எல்லா முயல்களும் அவர் பாதுகாப்பில் உள்ளனவாம். படத்தில் உள்ள சந்திரனின் சிலை பிரித்தானிய அரும்பொருட்காட்சியறையில் உள்ளது.
கிரகணங்கள் பற்றிய கதைகள்.கிரகணங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன? கிரகணங்கள் கோள்களின் அசைவினால் ஏற்படுகின்றன. சூரியன், சந்திரன் பூமி ஆகியவை நேராக நிலைகொள்ளும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. பொதுவாகச் சந்திர, சூரிய கிரகணங்கள்தான் ஏற்படுகின்றன.சூரியனின் ஒளிக்கற்றைகள் சந்திரன் மேல் படும். சந்திரனின் நிழல் பூமியில் விழும். அப்போது சூரியகிரகணம் தோன்றும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி நிலைகொள்ளும் போது சந்தரனின் நிழல் பூமியில் விழும். அப்போது சந்திர கிரகணம் தோன்றும். இக்கிரகணங்களின் தோற்றம் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள் நிறையவே உண்டு. பலநாடுகளிலும் பல்வகையான கதைகள் உள்ளன. இங்கே சந்திர கிரகணத்தை மட்டும் பார்ப்போம்.கொலம்பஸ்கொலம்பஸின் நாடுகாண் படலத்தில் ஈடுபட்டிருந்தார். 1503 ஜூன் 25ந் திகதி ஜமேக்காவில் உள்ள சென்ற் ஆன்ஸ் குடாவில் அவரது கப்பல் கரைதட்டியது. அங்கு பழங்குடி மக்கள் வாழ்ந்தார்கள். கொலம்பஸ் குழுவினருக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.. கொலம்பஸ் பலரிடம் உதவி கோரினார். கொலம்பஸ் சந்திரகிரகணம் பற்றி அறிந்திருந்தார். அவர் கேத்திரகணித முறையில் சந்திரகிரகணம் எப்போது ஏற்படும் என்று அறிந்திருந்தார். மக்களிடம் தங்களுக்கு உணவு தருமாறு உதவி கேட்டார். அவர்கள் மறுத்தார்கள். எங்களுக்கு உணவு தராவிட்டால் கடவுள் உங்களைத் தண்டிப்பார். நாளை இரவு சந்திரன் வானத்தில் வரும். திடீரென சந்திரன் மறையும். உலகத்தை இருள் மூடிக்கொள்ளும். என்றார். அந்நாட்டுப் பழங்குடியினர் சிரித்தார்கள். சிரித்தபடி “பார்ப்போம்” என்றார்கள். பழங்குடி மக்களுக்குச் சந்திர கிரகணம் ஏற்படுவது பற்றித் தெரியாது. ஆனால் கோலம்பஸ் மறுநாள் அதவாவது 1504ம் ஆண்டு பெப்ருவரி 29ல் சந்திரகிரகணம் நிகழவிருப்பதை அறிந்திருந்தார்.கொலம்பஸ் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. கொலம்பஸ் சொன்னபடியே அடுத்தநாள் 1504ம் ஆண்டு பெப்ருவரி 29 இரவு நடந்தது. வானத்தில் சந்திரன் பிரகாசத்தோடு வந்தது. அந்நாட்டு மக்கள் குதூகலித்தனர். எங்கிருந்தோ வந்தவன் எங்களை ஏமாற்றுவதா? என்று ஆரவாரித்தனர். என்ன ஆச்சரியம்? சந்திரன் படிப்படியாக மறையத் தொடங்கியது. சற்று நேரத்தால் முழுமையாக மறைந்தது. சந்திரகிரகணம் நிகழ்ந்தது. செவ்விந்தியர்கள் பயந்துவிட்டார்கள். கொலம்பஸைப் பயத்துடன் சூழ்ந்து கொண்டார்கள். “எங்களைக் காப்பாற்றுங்கள்.” என்று நின்றார்கள். “உங்களுக்கு வேண்டியதைத் தருகிறோம்”; எனறு பலர் சத்தமிட்டார்கள். கொலம்பஸ் அம்மக்களைப் பார்த்தார். “நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்” என்று ஆறுதல் கூறினார். மெதுவாக இருள் விலகியது. மக்கள் ஆரவாரித்தனர். இசையெழுப்பினார்கள். குரவை வைத்தார்கள். அன்றிலிருந்து கொலம்பஸின் மேல் மதிப்பு ஏற்பட்டது. அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்கள். அவர்களுக்கு வேண்டிய உணவுவகைகளைக் கொடுத்து உபசரித்தார்கள்.இந்துசமயத்தில் கிரகணம்.சூரியனையும், சந்திரனையும் இராகு என்னும் பாம்பு விழுங்குவதாக இந்துசமயப் புராணங்கள் கூறுகின்றன. தேவர்கள் நீடு வாழ்வதற்காக அமிர்தம் வேண்டி நின்றார்கள். அமிர்தம் எங்கே கிடைக்கும். திருப்பாக் கடலைக் கடைந்தால் அமிர்தம் கிடைக்கும் என விஷ்ணு கூறினார். தேவர்கள் மட்டும் கடையமுடியாது. ஆதலால் .வ்வுலகில் உள்ள அசுரர்களையும் அழைத்தார்கள். மகாமேரு மலையை மத்தாகப் பயன்படுத்தினார்கள். ஆதிசேடன் என்ற பாம்பை கயிறாகப் பயன் படுத்தினார்கள். தேவர்கள் ஒரு புறம் நின்றார்கள். அசுரர்கள் மறுபுறம் நின்றார்கள். திருப்பாக்கடலைக் கடையும் நிகழ்ச்சி நடந்தது.மலையசைந்தது. திருப்பாக் கடல் கடையப்பட்டது. ஆதிசேஷனுக்கு வலித்தது. அமிர்தம் உருவாகிக் கொண்டு வந்தது. வலியினால் ஆதிசேஷன் விஷத்தைக் கக்கிவிட்டது. அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். அவர் உடனே அந்த விஷத்தைக் கையிலேந்தி விழுங்கினார். அவரது மனைவி உமாதேவியார். அவர் ஓடோடி வந்தார். சிவனாரின் தொண்டையை அழுத்திப் பிடித்தார். விஷம் கீழிறங்க வில்லை. தொண்டைக் குழியோடு நின்றுவிட்டது. சிவனின் தொண்டையில் விஷம் இருந்தது. அதனால் அவரது தொண்டை நீலம்பாரித்துவிட்டது. அமிர்தம் கிடைத்துவிட்டது. தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்க வேண்டும். அசுரர்களுக்குக் கிடைக்கக் கூடாது. கிடைத்தால் அவர்கள் சாகா வரம் பெற்றுவிடுவார்கள். என்ன செய்வது. தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள். மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்தார். அசுரர்கள் அந்த அழகியின் அழகில் மயங்கிக் கொண்டிருந்தார்கள். இராகு என்ற அசுரன் தேவர்கள் போல் மாறுவேஷத்தில் வந்தார். தேவர்களோடு கலந்து கொண்டார். அவரை யாரும் அடையாளம் காணவில்லை. ஆனால் சூரியனும் சந்திரனும் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர். மெதுவாக விஷ்ணுவிடம் கூறிவிட்டார்கள்.தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறப் பட்டது. இராகுவுக்கும் கொடுபட்டது. அவர் குடிப்பதற்கு முயற்சிக்கையில் மோகினி வடிவிலிருந்த மகாவிஷ்ணு இராகுவின் கழுத்தைத் துண்டம் செய்தார். வாய்க்குள் அமிர்தம் சென்றிருந்தது. அதனால் தலைப்பகுதி உயிரோடிருந்தது. உடல் கேதுவாக மாறியது. இராகுவும் கேதுவும் சேர்ந்து கொண்டன. சூரியனையும் சந்திரனையும் விழுங்கிவிடச் சபதமெடுத்தன. இன்றுவரை அவை சந்திரனையும், சூரியனையும் விழுங்கும் நிகழ்ச்சி காலத்துக்குக் காலம் நடைபெறுகிறது. அதுதான் கிரகணம். என்று புராணம் கூறுகிறது. ரோமர்கள்.
உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் கிரகணம் பற்றிய கதைகள் உண்டு. அவை ஒவ்வொரு விதமாக இருக்கும். அவர்களது கற்பனைக்கு ஏற்ப பல்வேறு உருவங்களில் அமைந்திருக்கும். ரோமசாம்ராச்சியத்தில் சந்திரனை வானில் உள்ள பயங்கரமான வேதாளம் விழுங்க வருவதாக நம்பினார்கள். அதன் நிழல் சந்திரன்மேல் விழத்தொடங்கியதும் மக்கள் ஒன்றாகக் கூடி ஒலிகளை எழுப்பி “சந்திரனை விடு, சந்திரனை விடு” என்று கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்வார்கள்.
சீனாதேசத்தில்
சீனதேசத்திலும் வானில் உள்ள ட்ரகன் என்ற பயங்கர விலங்கு சந்திரனைக் கடித்து விழுங்குவதாக நம்பினார்கள். ட்ரகன் சந்திரனைப் பின் தொடர்ந்து துரத்தி வரும். சந்திரனை எப்படியாவது தனது இரையாக்கிக் கொள்ள அதற்கு மிக விருப்பம். அதனால் வான் வீதிவழியாக விரட்டிக் கொண்டிருக்கும். கிட்ட நெருங்கிப் பிடித்து விழுங்கும்போது சந்திரனின் ஒளி மங்கும். அப்போது கிரகணம் உருவாகும.; சீனதேசத்து மக்கள் சீற்றங்கொள்வார்கள்.
கிரகணத்தின் போது உயரமான மரக்கிளைகளில் பெரிய மணிகளைக் கட்டித் தொங்கவிடுவார்கள்.
பயங்கர விலங்கின் நிழல் சந்திரனில் விழத்தொடங்கியதும் மணிகளை அடித்து ஒலியெழுப்பி ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் எழுப்பும் சத்தத்தினால் விலங்கு சந்திரனை விட்டு ஓடிவிடும் என்று நம்பினார்கள். அத்துடன் சந்திரன் கண்ணாடியைப் பிரதிபலிக்கும். சந்திர கிரகணத்தின் போது கண்ணாடியைத் தட்டி ஆரவாரம் செய்தால் ட்ரகன் ஓடிவிடும் என்று நம்புகிறார்கள். கிரகணம் ஏற்பட்டு முடியும் வரை சத்தமிடுவார்கள். அதே வேவைளை கிரகணம் முடியும்வரை விரதமிருப்பார்கள்.எஸ்கிமோவர்துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவ மக்கள் சந்திரன் நோய்வாய்ப்படுவதாகக் கருதுவர். அதனால் அந்த நேரம் சந்திரன் மரணமாகிவிடுவதாக நம்பினார்கள். கிரகணநேரத்தில் தாங்கள் வீட்டில் பாவிக்கும் பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்து விடுவார்கள். இன்றும் அந்த வழக்கம் எஸ்கிமோவப் பெண்கள் மத்தியில் பெருவழக்காக இருக்கிறது. செத்தவர்களிடம் இருந்து தொற்றுப் பரவும் என்ற ஐதீகம் இ;ன்றும் நிலவுகிறது. சந்திரனுக்கு வந்த நோயின் கிருமி தங்களையும் தாக்கும் என்று நம்பினார்கள். அதற்காகவேதான் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களைக் கவிழ்த்து வைத்து விடுவார்கள்.
மேற்கு ஆபிரிக்கக் கரையோரத்தில்மேற்கு ஆபிரிக்கக் கரையோர நாடுகளில் வசிப்போர் சூரியனின் நிழல் விழுவதால் சந்திர கிரகணம் தோன்றுவதாக நம்பினார்கள். சந்திரனைச் சூரியன் பின் தொடர்வதாக நம்பினார்கள். அதனாலேயே சந்திரனுக்குத் துன்பம் ஏற்படுவதாக நம்புகின்றனர். சந்திர கிரகணம் தோன்றும்போது மக்கள் வீதிகள்தோறும் நின்று “சந்திரனை விடு. அப்பால் போ. அப்பால் போ. சந்திரனை விடு. சந்திரனை விடு” என்று சத்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள்.ஒஜிபாவா செவ்விந்தியர்ஒஜிபாவா என்ற செவ்விந்தியர்கள் சந்திரகிரகணத்தின் போது சந்திரனின் ஒளி படிப்படியாக மங்கிவிடும். ஒளியை மீண்டும் பெறுவதற்காக தீப்பிளம்பு உள்ள அம்புகளை வானை நோக்கி செலுத்துவார்கள். சூரிய சந்திர ஒளி மீண்டும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தீப்பந்தங்களை வானை நோக்கிச் செலுத்துவார்கள்.இந்திய நீலகிரி மலையில்இந்திய நீலகிரி மலைப் பகுதியில் ‘ரோடாஸ்’ இனமக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் சந்திரனில் முயல் உள்ளதென நம்புகின்றனர். அந்த முயலோடு சந்திரனையும் பெரிய பாம்பு வளைத்துப் பிடித்து விழுங்குவதால் கிரகணம் தோன்றுகின்றது என்று நம்புகின்றனர். பாம்பை விரட்டுவதற்காக மேளங்களைத் தட்டி ஆரவாரிப்பார்கள். அத்துடன் சந்திரனுக்கும் முயலுக்கும் ஆபத்து வரக்கூடாதென்று விரதமிருப்பார்கள். ‘டான்கோ’ என்ற வேதாளம் விழுங்குதல்.இந்தியாவில் மத்திய பிரதேசம் உள்ளது. அங்குள்ள பீகார் மாநிலத்தில் முண்டாஸ் இனமக்கள் வாழ்கிறார்கள். முன்னொரு காலத்தில் டான்கோ என்ற பயங்கர வேதாளம் வாழ்ந்தது. அது பெருஞ்செல்வத்துக்கு அதிபதி. வட்டிக்குப் பணம் கொடுத்து வாழ்ந்தது. ஒருமுறை சூரியனுக்கும், சந்திரனுக்கும் பெரும் கஸ்டம் ஏற்பட்டது. அதில் இருந்து மீள்வதற்குப் பணம் தேவைப்பட்டது. அவர்களிடம் பணம் இல்லை. இருவரும் வேதாளத்திடம் சென்றார்கள். வேதாளத்திடம் கடன் கேட்டார்கள். வேதாளம் பல நிபந்தனைகளை விதித்தது. “கடனை உரிய நேரத்தில் கட்டவேண்டும். இல்லையேல் உங்களைப் பிடித்து விழுங்கி விடுவேன்”. என்றது. சூரியனும் சந்திரனும் உடன்பட்டுக் கடனைப் பெற்றார்கள். ஆனால் உரிய நேரத் தவணையில் கடனை மீளச் செலுத்தத் தவறினர். அதனால் வேதாளம் அவர்களைப் பிடித்து மறியலில் போட்டது. அதனால் சூரியனும் சந்திரனும் வெளியில் வரவில்லை.உலகம் இருளில் மூழ்கியது. மக்கள் துயருற்றனர். கிரகணம் ஏற்படும் நாளில் மக்கள் அரிசி. மளிகைச் சாமான்கள், ஆயுதங்கள் அனைத்தையும் தங்கள் வீட்டு முற்றத்தில் படைத்து நிற்பார்கள். அவற்றைப் ஏற்றுக் கடனை அடைக்கும்படி வேண்டுதல் செய்வார்கள்.வடமேற்கு அமெரிக்க போமோ இனமக்கள்.வடமேற்கு அமெரிக்காவில் போமோ இனமக்கள் வாழ்கிறார்கள். அவர்களிடம் சூரியனை கரடி கடித்துவிடுவதாக ஒரு நம்பிக்கையுண்டு. பரந்த பால்வெளியூடாக பெரிய கரடி நடந்து போய்க்கொண்டிருந்தது. அவ்வழியால் சந்திரனும் வந்தது. இரண்டும் நேருக்கு நேர் சந்தித்தன.
விலகிச் செல்வது யார் என்ற பிரச்சனை எழுந்தது. வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. சந்திரனுக்கும் கரடிக்கும் சண்டை வந்தது. கரடி சந்திரனைப் பிடித்தது. பின்னர் சேற்றில் தள்ளி வீழ்த்தி விட்டது. சந்திரன் சேற்றில் விழுந்ததால் கருமையாகியது. அது கிரகணம் ஏற்பட வாய்ப்பானது. பிறேசில் நாட்டில் ஒரு கதைசூரியனும் சந்திரனும் சகோதரர்கள். சூரியனின் தங்கைதான் சந்திரன். இருவரும் சிறுவயதில் ஒற்றுமையாகவே வாழ்ந்தார்கள். வளர்ந்தபின் பொறாமை பற்றிக் கொண்டது. இருவருக்கும் இடையில் சண்டை உருவாகிவிட்டது. இருவரும் பேசுவதில்லை. வேறுவேறு திக்கில் வாழ்ந்தார்கள். ஒருநாள் சூரியன் பயணம் போனார். சந்திரனும் அதே வழியால் பயணம் செய்தாள். இருவரும் விலகிப்போதாக இல்லை. வழியில் பிரச்சினை தோன்றியது. யார் வழிவிட்டு விலகிச் செல்வது. என்ற பிரச்சினை. வாக்குவாதம் முற்றியது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் இழுபறி நடந்தது. சண்டை தொடர்ந்தது. வானமும் உலகும் இருளானது.சண்டையின் போது ஒரு பையன் அம்பை விட்டான். அது சூரியனின் கண்களை ஊடுருவிச் சென்றது. சந்திரனின் கண்களையும் ஊடுருவியது. இருவர் கண்களும் இருளாகின. இரத்தம் வழிந்து சிவந்தது. அதனால் சூரிய கிரகணம் தோன்றியது. ஓரு தேவன் வந்தான். கண்களுக்கு வைத்தியம் செய்தான். உடனே சுகமானது. வட கலிபோர்னியாவட கலிபோர்னியா ஹ_பா இந்திய இனத்தவர் உள்ளனர். அவர்கள் மத்தியில் உலாவரும் கதையிது.
சந்திரனுக்கு இருபது மனைவியர் இருந்தனர். அவரது வீட்டில் எல்லாவகையான விலங்குகளும் இருந்தன. மலைபோன்ற சிங்கம், கரடி, பாம்பு வகைகள் பூச்சிகள் போன்றனவும் இருந்தன. சந்திரன் இவை யாவற்றுக்கும் உணவளிப்பதற்காகக் கடினமாக உழைத்தார்.
ஒவ்வொரு நாளும் வேட்டையாடப் போவார். வேட்டையாடியவற்றைக் கொடுப்பார். யாவும் உண்டபின் நிம்மதியாக இருந்தன.


ஒரு நாள் சந்திரன் வேட்டையாடப் போனார். ஒன்றும் அகப்படவில்லை. வெறும் கையோடு வந்தார். வளர்ப்பு விலங்குள் சந்திரனிடம் வந்தன. “சாப்பிடுவதற்கு உணவு வேண்டும்.” என்றன. “இன்று ஒன்றும் கிடைக்கவில்லை. நாளை வேட்டையாடிக் கொண்டு வருகிறேன். பொறுமையாக இருங்கள்” என்றார். “எங்களுக்குப் பசிக்கிறது. இப்போது உணவு வேண்டும்”. என்றன. சந்திரன் பேசாமல் இருந்தார். நாங்கள் கேட்கிறோம். பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்”;. கூறிக் கொண்டு சந்திரனைத் தாக்கத் தொடங்கின. சந்திரன் விழுந்து சந்திரன் ஒளியிழந்து கிடந்தார். இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அது கிரகணமாகியது.
சந்திரனின் மனைவிகளில் தவளையும் ஒன்று. தனது கணவனின் நிலைகண்டு பாய்ந்து வந்தது. சந்திரனைத் தாக்கிய பூச்சிகளை அடித்து விரட்டியது. இதனைப்
பார்த்துக் கொண்டிருந்த மற்ற மனைவியர்கள் வந்தார்கள். சந்திரன் சிந்திய இரத்தம் யாவறi;றயும் சேர்த்தார்கள். சந்திரனின் உடலில் சேர்த்தார்கள். சந்திரன் மீண்டும் ஒளியெற்;று வந்தார்.
மொசப்த்தேமியாவில்
வானில் மிதந்துவரும் பெரிய தேவதையாகச் சந்திரனைப் பார்க்கிறோம். சில சந்தர்ப்பங்களில் சந்திரன் ஆண்தெய்வமாகவும் வர்ணிக்கப்படுகிறது.
5000 ஆயிரம் வருடங்களுக்கு முன் மொசப்பத்தேமிய தேசத்தில் ஊர் என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்குக் கோயில் இருந்தது. சந்திரனை ‘சின்’ என்ற பெயரால் அழைத்தார்கள். சந்திரக் கடவுளான ஹ_பால் என்ற சொல்லில் இருந்தே ‘அல்லாஹ்’ என்ற சொல் பிறந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்து சமயச் சந்திரா சந்திரன் பத்து வெண்குதிரைகய் பூட்டிய தேரில் இரவு வானில் பவனி வருகிறார். அவரது ஒரு கையில் ஆயதமும் மறு கையில் தாமரையும் ஏந்தியபடியே வருகிறார். உலகத்தின் உயிரினங்களைக் காப்பதற்காகவே வானில் இரவு வேளையில் வருகிறார். சந்திரன் தக்சனின் இருபத்தியேழு மகள்மாரையும் திருமணம் செய்தார். சோகினியைத் தவிர மற்றவர்களைப் புறக்கணித்தார். தக்சன் சபித்தார். அவருக்கு தேய்ந்து வளரும் நோயைத் கொடுத்தார். சிவனைத் தியானித்து சாபவிமோசனம் கேட்டார். சிவன் தேவர்களைத் தூது அனுப்பினார். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மாதமொருமுறை தேய்ந்து வளர வரம் கொடுத்தார். ஒருநாள் சிவனின் சடாமுடியில் இருக்கும் வரத்தையும் பெற்றார். அதனாலேயே சிவனின் சடாமுடியில் சந்திரன் இருந்து அலங்கரிக்கிறார். திங்கள் அணிந்தவன் என்ற திருப் பெயரையும் சிவன் பெற்றார். சந்திரனைப் பின்பற்றிய வம்சம் தோன்றியது. சந்திர வம்சத்து அரசர்கள் தேமான்றினார்கள். முயல்களைக் காக்கும் தேவனாக சந்திரன் விளங்குகிறார். சிவனுக்குக் கோயில் அமைத்துக் கொடுத்தார்.
கொயொல்சாக்குய் என்ற சந்திரத் தேவதைகௌரிக்குய் எல்லாத் தேவதைகளுக்கும் தாயாவாள். அவளே சந்திரன்,சூரியன், நட்சத்திரங்கள், அனைத்தையும் பெற்றாள். அவள் பயங்கரத் தேவதையாவாள். அவளே பிறப்புக்கும். இறப்புக்கும் வேதையாவாள். அவளது கழுத்தில் அவளது பிள்ளைகளின் தலைகளும். எலும்புகளும் மாலையாகத் தொங்கும். கருவறையும், சுடுகாடும் அவளிடம் இருந்தது. பறக்கும் சிறகுகளையும் கொண்டிருந்தாள். அவளுக்கு நாநூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவளுக்கு மகளாக கொயொல்சாக்குய் பிறந்தாள். தாயின் நடவடிக்கைகள் மகளுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் அவளது பிள்ளைகளை அழைத்துத் தாயைக் கொலைசெய்யுமாறு கேட்டுக் கொண்டாள்.கௌரிக்குய் மரணப்படுக்கையில் கிடந்தாள். உடனே அவளது மகன் குயிற்சிலோபோச்ரிலி ஆயுதத்தை எடுத்தான். நாநூறு பிள்ளைகளையும் கொன்றொழித்தான். கொயொல்சாக்குய்யின் தலையைக் கொய்து வானில் வீசினான். அத்தலை சந்திரனாக இன்றும் பிரகாசிக்கிறது.‘கிகேற்’ - கிரேக்கரின் சந்திரத் தேவதைகீகேற் கிரேக்கர்களின் சந்திரத் தேவதை. அவள் கிரேக்கர்களின் காவல் தெய்வம் ஆகும். அதன் தோற்றம் பயங்கரமானது. கீகேற் தேவதை மூன்று தலைகளுடன் காட்சியாகும். நாய், பாம்பு, குதிரைதம் தலைகளுடன் காட்சி கொடுப்பாள். அவளுக்குத் துணையாக இரண்டு பூதங்கள் கூடவே இருக்கும். அந்தத் தேவதையைச் சூனியக்காரர் போற்றுவார்கள். அவளை வாலாயமத் செய்து சூனியக்காரர்கள் தங்கள் தேவைகளை முடித்துக் கொள்வார்கள். கீகேற் தேவதையின் இருப்பிடம் சுடலையாதகும். அத்துடன் முற்சந்திகளிலும் இருப்பாள். மந்திரவாதிகள் சுடலைக்குச் சென்று இந்தத் தேவதையை வணங்குவார்கள். முற்சந்திகளில் நடுச்சாமத்தில் கிரியைகளைச் செய்வார்கள். இந்த இடங்களில்தான் மக்கள் தமது நேர்த்திகளைச் செலுத்துவார்கள்.செலின்- கிரேக்க சந்திர தேவதைகிரேக்கம் பெரிய நாடு. அஙற்குள்ள ஒரு பகுதி மக்கள் சந்திரனைச் செலின் என்றழைப்பார்கள். செலின் சந்திரத் தேவதை கிரேக்கர்களின் தெய்வமாவாள். அவள் அழகும் கவர்ச்சியும் கொண்டவள். வெண்குதிரைகள் பூட்டிய வெள்ளி ரதத்தில் வானில் பவனி வருவாள். பகலில் சகோதரனான ஹேலியோஸ் என்ற சூரியனின் பவனி நடக்கும். ஹேலியோஸ்; நேரந் தவறாமல் அதிகாலையில் புறப்படுவார். அப்போது விடியலின் தேவதை இயோஸ் வழியனுப்பி வைப்பாள். தனது கடமையை முடித்து மேற்கில் மறைந்து போவார். அங்கேயும் இயோஸ் வரவேற்கக் காத்திருப்பாள்.அவரைத் தொடர்ந்து செலின் செல்வாள். செலினுக்குக் குறித்த நேரத்தில் வானில் பவனி இருக்காது. அவளது பவனி வித்தியாசமான நேரங்களில் இருக்கும். அவள் விலங்குகளைக் காப்பாற்றும் தெய்வம். விலரங்குகளுக்குத் தீங்கு வராமல் இருப்பதற்காகவே இரவில் வானில் பவனி வருகிறாள். எனினும் அவளைச் சில விலங்குகள் எதிர்க்கும். அவள் போரிடுவாள். போரிடுவதால் அவளது பிரகாசம் குறைவடையும். விலங்குகள் சில நாட்களில் வெற்றி கொள்ளும். அப்போது அவள் காணாமல் போய்விடுவாள். அன்று அமவாசை நாளாகும். வெற்றிகொண்ட நாள் முழமையான பிரகாசமாக இருக்கும். அன்று முழுமதி நாளாகும். விலங்குகள் அவளை மடக்கி வெற்றி கொள்ளும். அவள் தோற்றம் வானில் சடுதியாக மறையும். அவ்வேளை கிரகணம் தோன்றும். உலகத்து மக்கள் சத்தமிட்டு, ஒலியெழுப்பி ஆரவாரம் செய்வார்கள். விலங்குகள் பயந்து விலகி ஓடிவிடும். செலின் மீண்டும் பிரகாசமாக வானில் பவனியைத் தொடங்குவாள்.தாங்கள் செலின் தேவதையை மீட்டெடுத்து விட்டதாக மக்கள் கொண்டாடுவார்கள். விடியலின் தேவதை இயோஸ். அவள் செலினின் சகோதரி. இயோஸ் மேற்கில் செலின் வருகையை எதிர் பார்த்து நிற்பாள். அதிகாலைப் பொழுதில் இயோஸைச் சந்திப்பாள். முடிவுரைமுற்காலத்தில் வானத்தில் உள்ள பொருட்களைப் போய்ப்பார்க்க முடியாது என்று எண்ணினார்கள். அதனால் பலவாறான கற்பனைக் கதைகளை இயற்றினார்கள். சந்திரனின் தோற்றம் இவ்வாறான கதைகளுக்கு வித்திட்டன. இக்கதைகள் யாவும் அன்பு, உண்மை, அழகு பற்றியதாகவே அமைந்தன. மனித இனம் உள்ளளவும் புதுப்புதுக் கதைகள் தோன்றத்தான் செய்யும். பல உண்மைகளும் தோற்றம் பெறத்தான் செய்யும். கருவினில் உருவாகும் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்று சந்திரனின் வளர்தல், தேய்தல் மூலம் கணிக்கப் படுவதாகவும் கூறுகிறார்கள். எப்படி இருப்பினும் சந்திரனின் கதைகள் எம்மைப் பரவசப்படுத்திக் கொண்டுதான் இருக்கும்.

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP