உன்னைப் பெற்றதால்…..
ஈச்சிலம்பற்று அழகான கிராமம். வரலாற்றுப் பெருமைமிக்க செம்பகவல்லி அம்மனின் கோயில் உள்ள கிராமம். உழைப்பால் உயர்ந்த மக்கள் வாழ்கின்றார்கள். உள்ளத்தால் கோடீஸ்வரர்களாக விளங்கினார்கள். நல்லவர்களாகவும் வல்லவராகவும் வாழவேண்டும் என்ற மனங்கொண்டவர்கள். வெருகல் கங்கை பாய்ந்து வளம்கொடுக்கும். வயல்விளைந்து கிடக்கும். ஆநிரைகள் அசைபோட்டுப் பால் சொரியும். கிராம மக்களை நாட்டின் பிரச்சினை வாட்டியெடுத்தது. பலர் காணாமல் போனார்கள். எல்லோரும் அகதிகளானார்கள். தாயை அல்லது தந்தையை இழந்த சிறுவர்கள் ஏராளம். வறுமை தாண்டவாமாடியது. சிறுவர்களும் உழைக்க வேண்டியிருந்தது. கல்வியில் மேம்பட வேண்டும் கல்வியினால் வாழ்வு சிறக்கும். வாழ்க்கையில் உயரலாம். என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டது. அதிபரும் ஆசிரியர் சிலரும் பாடுபட்டார்கள். இரவு பகலாக உழைத்தார்கள். பாடசாலை எழுச்சி கொண்டது.
பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் வரவில்லை. இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டு அதிபர் பாடங்களை நடத்தினார். பல தொண்டு நிறுவனங்கள் உதவின. தொண்டர் ஆசிரியர்கள் கற்பிக்க முன்வந்தார்கள். அவர்களுக்குச் சிறுதொகை வேதனமாக வழங்கப்பட்டது. மாணவர்களது நன்மை கருதி ஒரு குடும்பத்துக்கு ஒரு சைக்கிள் வீதம் அதிபர் பெற்றுக் கொடுத்தார். அதிபர் தனது ஆசிரியர்களின் உதவியோடு பெற்றாரைக் கண்டார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். பெற்றார்கள் விழித்துக் கொண்டார்கள். மாணவர்களுக்கு புத்திமதிகள் கூறினார். பழயமாணவர் சங்கத்தின் உதவியைப் பெற்றார். அவர்கள் பாடசாலைக்காக உழைத்தார்கள். பாடசாலை விழித்துக் கொண்டது.
நடேசன் பதினோராம் வகுப்பில் படிக்கிறான். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா கமலம்தான் எல்லாம். தம்பி கணேசன் மட்டும் இருந்தான். கணேசன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். மாதவனுக்கு அம்மா இல்லை. அவனுக்கு அப்பா மணியம்தான் எல்லாம். மாதவனும் நடேசனோடு பதினோராம் வகுப்பில் படிக்கிறான். மாதவனின் தம்பி நவநீதன் ஆறாம் வகுப்பில் படிக்கிறான். நன்றாகப் படிக்கக்கூடிய பிள்ளைகள். அவர்கள் ஒழுங்காகப் பாடசாலைக்கு வருவதில்லை. அவர்கள் வறுமைகாரணமாக உழைக்கவேண்டியிருந்தது. கமலத்தின் அண்ணன்தான் மணியம். தங்கைக்கு உதவியாக மணியம் இருந்தார்.
ஈச்சிலம்பற்றுக்கு வளமூட்டுவது வெருகல் கங்கைதான். கங்கை நீரைச் சுமந்து சலசலத்தோடும். வெருகலம்பதியானை அடியார்கள் வணங்கி அவன் கருணையைப் பெறுவார்கள். பண்டையப் பெருமைக்கும் தமிழர்களின் இருப்புக்கும் அடையாளம் அந்த வேல்முருகனின் கோயில். நீரின் சிலிர்பில் கரையோரத் தாவரங்கள் மதாளித்து மகிழும். வெருகல் கங்கை ஓரமாக வளமான நிலம் கிடந்தது. தண்ணீரை வேண்டியளவு வெருகல் கங்கை வழங்கியது. பம்பிகள் தேவைப்பட்டன. தொண்டு நிறுவனங்கள் அவற்றுக்கு உதவின. கங்கை ஓரம் தோட்டங்கள் பெருகின. மக்கள் ஆர்வமாகச் செயற்பட்டார்கள். மணியமும் கமலத்துக்கு சேர்ந்து தோட்டம் செய்தார்கள். இருவரது தோட்டங்களும் அருகிலேயே இருந்தன. அவர்களுக்குப் பொதுவாக பம்பி கொடுபட்டது.
நடேசனின் தாய் கமலம். தோட்டத்தில் தனியாகப் பாடுபடுவதைப் பிள்ளைகள் விரும்பவில்லை. அம்மாவோடு சேர்ந்து உழைப்பார்கள். தோட்டத்தில்தான் பொழுது போகும்.
பக்கத்தில் மாதவனின் தோட்டமும் இருந்தது. எல்லோரும் சேர்ந்து தோட்டத்தில் வேலை செய்வார்கள். பயிர்கள் செழித்துக் காய்க்கத் தொடங்கி விட்டன. அவற்றுக்குக் காவல் அவசியம். இரவில் தோட்டத்திலேயே தங்குவார்கள். தோட்டத்தில் ஒத்தாப்பு இருந்தது. அது காவலுக்கும், இளைப்பாறுவதற்குமாகக் கட்டபட்ட தற்காலிகச் சிறுகுடில். அரிக்கன் லாம்பு ஒத்தாப்பில் தொங்கும். வேலைகள் முடிந்ததும் இரவில் பாடங்களைப் படிப்பார்கள்.வெருகல் கங்கை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரம்புப் புதர்கள் தொட்டம் தொட்டமாக ஆடிக்கொண்டிருந்தன. கங்கையின் குளிர்ந்த நீரை பம்பிகள் இறைத்துக் கொண்டிருந்தன. தண்ணீர் காய்கறித் தோட்டங்களைக் குளிப்பாட்டியது. பயிர்கள் சிரித்துக் காற்றில் ஆடின. கத்தரி, மிளகாய், வெண்டி, பூசணி, வெங்காயம் எனப் பயிர்கள் காய்த்துக் குலுங்கின.
கிராமத்துப் பண் காற்றில் தவழ்ந்து வந்தது. அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய வேலை. இன்னும் முடியவில்லை. அவசரமாகத் தோட்டத்தில் வேலைகளைச் செய்தார்கள்.“மாதவன்
நேரமென்ன”? நடேசன் சத்தமிட்டான். பம்பி இரைந்து கொண்டிருந்தது. “சரியாக ஏழு மணி. ஏழரைமணிக்குப் பாடசாலையில் நிற்க வேண்டும். வெளிக்கிடு போவம”;. மாதவன் சத்தமாகச் சொன்னான். தோட்டத்தை ஒருமுறை பார்த்தான். பூசணிக்காய்கள் கண்ணைக்கவர்ந்தன. கத்தரியும் கறிமிளகாயும் அவனைப் பார்த்துச் சிரித்தன. வழியில் சந்தை இருக்கிறது. கொடுத்துவிட்டுப் போகலாம். சிலவகைக் காய்கறிகளைப் பிடுங்கினார்கள். மாமா மூடையில் கட்டினார்.
செம்பகா மகாவித்தியாலயம் ஈச்சிலம்பற்றுக் கிராமத்தில் இருந்தது. தோட்டம் சுமார் ஏழு கிலோ மீற்றர் தொலைவில் இருந்தது. நிறுவனத்தின் மூலம் அதிபர் சைக்கிள் வழங்கியிருந்தார். நடேசனுக்கும், மாதவனுக்கும் ஆளுக்கொரு சைக்கிள் கிடைத்தது. “நீங்கள் பாடசாலைக்கு வருவதற்காகத்தான் இந்தச் சைக்கிள். ஒழுங்காக வந்து படித்து நல்லநிலைக்கு வரவேண்டும”;. அதிபர் அறிவுரை கூறிக்கொடுத்தார். அது பேருதவியாக இருந்தது. ஒரு சைக்கிளில் இருவர். ஒருவர் பெடலை மிதிப்பார் இன்னொருவர் சைக்கிள் பாரில் இருப்பார். கரியரில் காய்கறி மூடை ஒன்றிருக்கும். அவரது ஒருகால் பெடலில் இருக்கும். விரைந்து சைக்கிள் ஓடும். ஈச்சிலம் பற்றுச் சந்தையில் காய்கறி மூடைகள் இறக்கபடும். ஏழுமணிக்கு சைக்கிள்கள் இரண்டு பாடசாலை வளாகத்தினுள் புகுந்துவிடும். அவர்கள் போனதும் முதலாம் மணி ஒலிக்கும். பாடசாலைக்குப் பிந்தியது கிடையாது.
வன்செயலின்போது அவர்களது வீடு அழிக்கப்பட்டுவிட்டது. நிறுவனம் தற்காலிகக் குடிலை அமைத்துக் கொடுத்திருந்தது. வீட்டில் ஆச்சியிருந்தார். பகலில் அவர் சமைப்பார். பாடசாலை விட்டதும் வீட்டுக்குப் போவார்கள். ஆச்சி சமைத்துவைத்திருக்கும் உணவை நால்வரும் உண்பார்கள். மாலைநேர வகுப்புகளுக்குத் தவறாது போவார்கள். வகுப்புக்கள் ஐந்தரை மணிவரை நடக்கும். அதிபர் வகுப்புக்களைச் சுற்றி வருவார். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள். வகுப்புக்கள் முடிந்ததும் தோட்டத்துக்குப் போய்விடுவார்கள்.
வழமைபோல் தோட்டத்திலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டார்கள். வட்டவானைக் கடந்திருப்பார்கள். எங்கும் பதட்டமாக இருந்தது. வானம் இடிந்து வீழ்ந்ததுபோல் இருந்தது. ஆட்டிலறி ஷெல் சரமாரியாக வந்து வீழ்ந்து வெடித்தது. வீதியில் இருந்த கொங்கிறீற் பாலத்தினடியில் தஞ்சமானார்கள். அரைமணிநேரம் இடைவிடாது நிலம் அதிர்ந்து கொண்டிருந்தது. மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு வீதியால் ஓடிக் கொண்டிருந்தார்கள். “எங்கப்பா ஓடுவது? …ஓடியோடிக் களைச்சாச்சி. இனியும் ஓடேலாது.” முதியவர்கள் பலர் நடக்க இயலாமல் விழிபிதுங்க நின்றார்கள். “இப்படி நடக்குமென்று ஆருக்குத் தெரியும்? இதில இந்த மரத்துக்குக் கீழ் நிற்பம். நடக்கிறது நடக்கட்டும்.” அவர்கள் நின்றார்கள். சனங்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் போய்விட்டார்கள். ஆனால் இந்த முதியோர்கள் என்ன செய்வார்கள்?.
நடேசன் எட்டிப்பார்த்தான். இரண்டு மூன்று முதியோர்கள் வீதியில் வீழ்ந்து கிடந்தார்கள். என்ன செய்யலாம்? யோசித்தார்கள். அவர்கள் பகலில் உடுப்பதற்காக சாறன்கள் கொண்டுவருவது வழக்கம். “மாதவன், முதியோருக்கு உதவவேண்டும.; இதனை அதிபரும். ஆசிரியர்களும் சொல்லித் தந்தவர்கள். இப்ப என்ன செய்வம்.? நடேசன் ஆலோசனை கேட்டான். கணேசன் விவேகி. “அண்ணா எங்கட சாறன் இருக்கு. இப்ப நமக்குத் தேவை நாலு தடிகள்தான்”. சட்டெனக் கூறினான். நவநீதனின் கண்கள் பக்கத்து வயல்வேலியைப் பார்த்தன. உறுதியான கதியால்கள் தென்பட்டன. இருவரும் பாய்ந்தார்கள். நான்கு கதியால்கள் வந்தன. வெடிச்சத்தம் குறைந்திருந்தது. சாறங்களை எடுத்து விரித்தார்கள். அதற்குள் தடிகள் புகுந்தன. தற்காலிக கட்டில்கள் தயார். வெளியில் வந்தார்கள். முதியோர்கள் கிடந்த இடத்துக்கு ஒடினார்கள்.
இரண்டு பேராகச் சேர்ந்தார்கள். முதியவர்களைத் தற்காலிகக் கட்டிலில் வைத்தார்கள். தூக்கினார்கள். அத்தனை பேரையும் பாதுகாப்பாகப் பாலத்துக்குக் கீழ் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். சிலருக்குச் சிறிதான காயங்கள் இருந்தன. முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். அவரைப்படுக்க வைத்தார்கள். இதயத்துடிப்பு நிற்பதற்கான அறிகுறி தென்பட்டது. நடேசன் அவரது நெஞ்சில் தனது கைகளைப் பதித்து முதற்சிகிச்சை அளித்தான். அது பலன்கொடுத்தது. பாடசாலையில் இந்தப் பயிற்சியினைப் பெற அதிபர் வசதிகள் செய்து கொடுத்திருந்தார். அப்பயிற்சி கைகொடுத்து உதவியது. அதிபரை நினைந்து கொண்டார்கள். ஷெல்சத்தங்கள் ஓய்ந்திருந்தன.
நடேசனும் நவநீதனும் சைக்கிள்களில் விரைந்தார்கள். இருவர் அவர்களுக்குத் துணையாக நின்றனர். சந்தியில் பிரதேசச் செயலாளரின் அலுவலகம் இருந்தது. சென்றார்கள். “ஷெல் அடிக்கிறாங்கள். என்னடா கண்டபடி சுத்துறீங்க”. பதட்டத்தோடு கூடியிருந்த பலர் அதட்டினார்கள். அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. நேரே பிரதேசச் செயலாளரிடம் சென்றார்கள். அவரிடம் நடந்ததைக் கூறினார்கள். அவர் ஆஸ்பத்திரிக்குக்கு முறையிட்டார். அம்புலனஸ் விரைந்தது. காயப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். மாணவர்களது செயற்திறன் ஊரெங்கும் பரவியது. அதிபர் மதிபாலர் மகிழ்ந்தார். மாணவர்களைப் பாராட்டினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் சேவை செய்யும் ஏதிலியர் நிறுவனம் உதவியது. மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்த வழிசெய்தது. நடேசன் முன்மாதிரியாக இருந்தான். மாணவர்களை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டான். “நாம் மாணவர்கள். கஸ்டம் என்பது நமது உடன்பிறப்பு. அந்தக் கஸ்டத்தை நாம் வெல்லவேண்டும். படித்து நமது சமூகத்துக்குச் சேவைசெய்ய வேண்டும். நாம் நமது சகோதரர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும். பாடங்களைக் கவனமாகப் படிப்போம். சித்தியடைவோம்”. திடசங்கற்பத்தோடு மற்றமாணவர்களை உற்சாகப்படுத்தினான்.
பரீட்சையும் விரைந்து வந்தது. பரீட்சைக்குப் போகும் மாணவரை அதிபர், ஆசிரியர்கள் நெறிப்படுத்தினார்கள். “வினாத்தாள்களை நன்கு வாசித்து விளங்கி விடையெழுதுங்கள். நீங்கள் அனைவரும் சித்தியடைவீர்கள். வாழ்த்தியனுப்பினார்கள். அதிபரின் அறிவுரையை நன்றாக விளங்கிக் கொண்டார்கள். பரீட்சையை நன்றாக எழுதினார்கள். பரீட்சை முடிந்ததும் தோட்டவேலையில் கவனம் செலுத்தினார்கள். மூன்று மாதங்கள் பறந்தோடின. பெறுபேறு வந்துவிட்டது. அதிபரும், ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். அவர்களது உழைப்பிற்கான அறுவடையை மாணவர்கள் பெற்றுக் கொடுத்துவிட்டார்கள். நடேசனும், மாதவனும் எல்லாப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றிருந்தனர். முப்பது பிள்ளைகளும் முழுமையான சித்தி பெற்று உயர்கல்வி பெறத்தகுதி பெற்றிருந்தார்கள்.
ஈச்சிலம்பற்று செம்பகா மகாவித்தியாலயம் நிலவொளியில் பளிச்சிட்டது. செம்பகா மகாவித்தியாலயம் தனது பவளவிழாவுக்காகத் தன்னை அலங்கரிப்பதில் மூழ்கிக் கிடந்தது. சில்லென்ற மெல்லிய காற்று உற்சாகத்தை விதைத்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அதிபர் ஆசிரியர்களுக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்திருந்தார். ஆசிரியர்கள் மாணவர்களுக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்திருந்தனர். பெற்றார் தம்பங்கினை உணர்ந்து செயற்பட்டார்கள். பெரியதொரு நிகழ்ச்சி நிரல் தயாரானது. ‘சித்தாள் வேலை எட்டாள் வேலைக்குச் சமனென்பார்கள்’. மாணவர்கள் படுகுஷியாக இருந்தனர். விடியவிடிய மக்கள் ஏதோவொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குழுக்களாக இயங்கினர். பலருக்கு உறக்கமே வரவில்லை.
அதிகாலைப் பொழுது எட்டிப்பார்த்தது. மாவிலை தோரணங்கள் காற்றில் அசைந்து வரவேற்றன. மாணவர்களில் பலர் தலைமைத்துவப் பயிற்சி பெற்றிருந்தார்கள். தங்களது கடமைகளை நன்குணர்ந்து செயற்பட்டார்கள். விழுமியக் கல்வி கொழுந்து விட்டிருந்தது. காலையில் இருந்து பலவிதமான நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணமே இருந்தன. ‘பண்பாட்டைக் காப்பது மாணவர்களது கடமை’ என்பது மாணவர்களது உள்ளங்களில் ஓடியது. அதிபரும், ஆசிரியர்களும் இதற்காகப் பாடுபட்டனர். மாணவர்களையும், அதிபர் ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். கல்வித்திணக்களம் பாடசாலையைப் பாராட்டியது. பெற்றாரை உற்சாகப் படுத்தியது. மாணவர்களைப் பெருமைப்படுத்த முன்வந்தது. பெற்றாரோடு இணைந்து விழாவினை ஏற்பாடு செய்தது.
விழா தொடங்கியது பெற்றார்களது வரிசையில் கமலமும், மணியமும் கண்கள் பனிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிபர் பெருமையோடு எழுந்தார். “வெட்டி வீழ்த்தப்பட்டாலும் எழுவோம். விழுவது எழுவதற்குத்தான். இதனை எனது மாணவர்கள் செயலில் நிலைநாட்டியுள்ளார்கள். இன்று கல்விப் பணிப்பாளர்களும், கல்விமான்களும் வருகை தந்துள்ளார்கள். உங்களைப் பாராட்டுவதற்காக. உங்கள் முயற்சி தொடரட்டும். மாணவர்களால் பாடசாலையும், கிராமமும் பெருமையடைகிறது”. அவர் மனதாரப் பாராட்டினார். கல்விப் பணிமனையினர் வாழ்த்திப் பரிசில்கள் கொடுத்தார்கள். பிரதேசச் செயலாளர் முதியவர்களைக் காத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்தார். கமலமும், மணியமும் தங்கள் பிள்ளைகளின் செயலை எண்ணி மகிழ்ந்தார்கள்.

0 comments:
Post a Comment