சிறுவர் பாடல்.
தங்கைக்கொரு பாட்டு
எனது உரை
சிறுவர்கள் சிந்தனைத் திறன் படைத்தவர்கள். எதனையும் துருவி ஆராயும் ஆற்றல் கொண்டவர்கள். சிறுவர்களது உள்ளங்கள் நாற்றுமேடை போன்றன. அவர்களது உள்ளங்களில் சிந்திக்கத் தக்க எண்ணக்ருக்களை விதைக்க வேண்டும். அவ்விதைகள் நல்லனவாகவும், வல்லனவாகவும் இருத்தல் அவசியம். சில கல்விமான்கள் எனப்படுபவர்கள் அறக்கருத்துக்களைப் பிள்ளைகளுக்குப் போதிக்கத் தேவையில்லை. நவீன விஞ்ஞான, தொழில்நுட்பக் கருத்துக்களை சிறுவர்களுக்குப் போதிக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
அறக்கருத்துக்கள் கொண்ட சிறுவர் இலக்கியங்கள் நமது சிறுவர்களுக்கு அவசியம் தேவை என்பதை இன்றைய சமூகம் போகின்ற போக்கை உணர்ந்தால் புரியும். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழும்’; கலையை நம் இளைய சமுதாயத்துக்கு வழங்க வேண்டியது அசியமாகிறது. பல்வேறு தலைப்புக்களில் சிறுவர்களுக்கு அறிவைப் புகட்ட வேண்டும். அவ்வகையில் நானும் என்னால் முடிந்தவரை சிறுவர்களுக்காக எழுதுகிறேன். அவர்களுக்கு இவ்வகை நூல்களை அறிமுகம் செய்து படிக்கத் தூண்ட வேண்டும்.
இச்செயற்;பாட்டினை பெற்றோரும், ஆசிரியர்களும் முன்னெடுக்க வேண்டும். நாங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த வழிகாட்டல்களைச் செய்யத் தவறினால் அதன் எதிர் மாறான பிரதிபலிப்புக்களைத்தான் காணமுடியும். நல்ல சமூகத்தை உருவாக்க சிந்திக்கவைக்கும் ஆற்றலை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். புலம் பெயர்ந்தவர்கள் தமது தாய் திருநாட்டின் தேவையைப் புரிந்து இலங்கையில் சிறுவர் இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும். எனது சிறுவர் பாடல்களைப் படிக்கும் நம்மவர்கள் பிரதியெடுத்துத் தமது பிள்ளைகளுக்குப் படிக்கும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். உங்களின் பின் உருவாகும் நமது தமிழ் சமூகம் நமது கலாச்சாரங்களை தூக்கி எறிந்து விடும் என்பதை மறுப்பதற்கில்லை.
பல்வகையான சிறுவர் பாடல்களைக் கலந்து இந்நூலில் புகுத்தியுள்ளேன். சிறுவருக்கு இவற்றை அறிமுகம் செய்து சிந்திக்க வையுங்கள்.
நன்றி
கேணிப்பித்தன் ச.அருளானந்தம்
தங்கைக்கொரு பாட்டு
காலை வணக்கம்.
காலை வணக்கம், காலை வணக்கம்
காலை வணக்கம் சொல்வோம்
காலை வணக்கம், காலை வணக்கம்
கடவுள் வாழ்த்துப் படிப்போம்
காலை வணக்கம், காலை வணக்கம்
கவலை இன்றிப் படிப்போம்
காலை வணக்கம், காலை வணக்கம்
சந்தோ சமாக இருப்போம்
காலை வணக்கம், காலை வணக்கம்
ஒன்றாய் ஆடி மகிழ்வோம்
காலை வணக்கம், காலை வணக்கம் சந்தோச மாய்ய் படிப்போம்
காலை வணக்கம், காலை வணக்கம
எப்படி உங்கள் நலம் காலை வணக்கம், காலை வணக்கம்
நலமாக நாமும் இருப்போம்
வரவேற்கிறோம்
வருக வருக என்று நாங்கள்
வரவேற்கிறோம் - உன்னை
வரவேற்கிறோம். வந்து சேர்ந்து பாடியாட
வரவேற்கிறோம் - நாங்கள்
வரவேற்கிறோம்
அன்பான எங்கள் செல்வம்
அறிவாயா நீ - இதை அறிவாயா நீ
இன்பம் பொங்க முறுவல் காட்டி
இங்கோடி வா - நீ
எழுந்தோடி வா
உன்னை நம்பி உலகம் இருக்கு
உணர்வாயா நீ – தங்காய்
உணர்வாயா நீ
உணர்ந்து கொண்டு உயரவேண்டும்
ஓடோடி வா – கற்போம்
ஓடோடி வா வந்து சேர்ந்து பாடியாட
வரவேற்கிறோம் - நாங்கள்
வரவேற்கிறோம்.
திக்கு முக்குத் தாளம்
திக்கு முக்குத் தாளம் - நீ
தினமும் போட்டு பாடு
தக்குப் புக்கு என்று – தட்டி
ததிங் கிணத்தோம் போடு
வலது கையை தூக்கு - அதை
வெளியில் நீட்டிக் காட்டு
வலது கையை விரைந்து – உடன்
வடிவாய் உள்ளே கூட்டு
இடது கையைத் தூக்கு - நீ
இடமும் வலமும் திரும்பு
உடலை அசைத்து ஆடு – உன்
உள்ளம் மகிழ்ந்து பாடு
காலை மெல்ல மடிப்போம் - நம்
கையை வெளியே எறிவோம்
வேலை தினமும் செய்வோம் - நாம்
விரைந்து பாடி அசைவோம்
திக்கு முக்குத் தாளம் - நீ
தினமும் போட்டு பாடு
தக்குப் புக்கு என்று - தட்டி
ததிங் கிணத்தோம் போடு
செல்வம் உனக்கே பாட்டு தங்கை என்றே சொல்வேன் - நீ
தாளம் போட்டு காட்டு
செங்கை ஆகும் கைகள் - என்
செல்வம் உனக்கே பாட்டு
அன்பு நிறைந்த உள்ளம் - அதில்
அறிவு பெருகித் துள்ளும்
என்றும் விழிகள் சிரிக்கும் - எனது
உள்ளம் சிறகை விரிக்கும்
ஊரார் புகழ வேண்டும் - உன்னை
உலகம் போற்ற வேண்டும் பாரில் உள்ள மக்கள் - பெரும்
பயனை அடைய வேண்டும்
விண்ணை வெற்றி கொள்ளும் - கல்வி
விரைந்து கற்க வேண்டும்
மண்ணின் தலைவி வாழ்க – என்றிம் மாந்தர் போற்ற வாழ்க.
அண்ணன் பாடும் பாட்டு
அண்ணன் பாடும் பாட்டு – நல்ல
அறிவைப் புகட்டும் பாட்டு
எண்ணம் கருத்தில் இருக்கும் - அறிவு
உள்ளத் திருந்து சுரக்கும்
முதியோர் சொல்லைக் கேட்போம் - அவர்நம்
முதிசம் என்று ஏற்போம்
பதியும் வண்ணம் கேட்போம் - அவற்றை
பகிர்ந்து வாழ்ந்து காப்போம்
ஆணும் பெண்ணும் சமமாய் - இங்கு
அன்பு கொண்டு வாழ்ந்தால்
காணும் உலகம் இன்பம் - என்றும்
காலம் எல்லாம் சொர்க்கம்
பூக்கள் எல்லாம் அழகு – அவை
பூக்கும் மரங்கள் பலது
பூக்கள் சேர்ந்தால் மாலை – போன்று
பொலிந்து சேர்ந்து வாழு. -தொடரும் -
1 comments:
vaazhthukkal.
mullaiamuthan.
Post a Comment