சிறுவர் பாடல்
சிறுவர் பாடல்
ஆலமரம்
ஆலமரம் கிளை பரப்பி
ஆடி யசைந்து நின்றது
கோல வெயில் தனைவடித்து
குளிர் நிழலைத் தந்தது
கிளி கொக்கு மைனாக்கூட்டம்
களித்து வாழ்ந்து வந்தன
கிளை நிறைந்து பறவையாட்டம்
கலக லத்து மகிழ்ந்தன
கழுகுக் கூட்டம் எங்கிருந்தோ
காற்றாய்ப் பறந்து வந்தன
எழுந்து பறவைக் கூட்டமெலாம்
இடம் கொடுத்து நின்றன.
நாளுக் கொரு பறவையினம்
நாளும் விரட்டப் பட்டன
நாட்கள் செல்ல கழுகுக்கூட்டம்
நமது மரத்தை ஆண்டன.
இயக்கர் நாகர் பழங்குடிகள்
இலங்கை நாட்டில் இருந்தனர்
தயக்க மின்றி விஜயன்வந்தான்
தலைகீழ் கதையாய் ஆனது.
0 comments:
Post a Comment